பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோல்


(ஆ) தோரணம் முறிதல் Toranam

murital

(2) தீமை, அழிவு - bad omen

'தோரணம் முறியுமால் .. .. ...'

(கம்ப.சுந்.374: 1)

(இ) தோரணம் நாட்டுதல்

Toranam nattutal

மங்கலம் - auspicious

'தோரணம் திசைதொறும் சுடர

நாட்டுக' (சூளா.902: 3)

திருமணம் - wedding

பூரண பொற்குடம் வைத்துப்

புறமெங்கும் தோரணம் நாட்டக்

கனாக் கண்டேன் தோழிநான்'

(நாலா.556: 3-4)

தோல் (கேடகம்) Tol (shield)

(1) வளம், செழிப்பு - flourishing

'.. .. .. ., மன்னர் எயில் ஊர் பல்

தோல் போலச் செல் மழை தவழும்,

அவர் நல் மலை நாட்டே'

(நற். 197:10-12)

(2) காப்பு - secure

'சிலை விசை அடக்கிய மூரி

வெண் தோல், அனைய பண்பின்

தானை மன்னர்' (பதி, 45:16-17)

தோல் (மான் தோல்) To1 (deer skin)

(1) நன்மை - goodness

'புள்ளி இரலைத் தோல்ஊன்

உதிர்த்துத் தீது களைந்து எஞ்சிய

திகழ் விடு பாண்டிற் பருதி

போகிய புடைகிளை கட்டி'

(பதி, 74:10-12)

(2) தூய்மை - pure

'மான்தோல் பள்ளி மகவொடு

முடங்கி, ஈன்பிணவு ஒழியப்

போகி' (பெரும்.89-90)

(புலித்தோல்) (tiger skin)

(3) வீரம் - valour

கொலை உழுவைத் தோல்

அசைஇ. கொன்றைந்தார்

சுவற்புரள' (கலி.1: 11)

(4) வலிமை - strong

'இரும்புலி வேங்கைக் கருந்தோல்

அன்ன கல்எடுத்து எறிந்த பல்கிழி

உடுக்கை ' (அகம்.285: 8-9)


தோல்


(ஆ) உரிவை (புலி உரிவை)

Urivai (tiger skin)

(5) ஆற்றல் - power

'வரி கிளர் வய மான் உரிவை

தைஇய, யாழ் கெழு மணி

மிடற்று, அந்தணன்'

(அகம்.கட வா: 14)

(ஏற்று உரிவை) (bull's hide)

(6) வீரம், பெருமை, வெற்றி - valom,

greatness, victory

‘ஓடா நல்ஏற்று உரிவை தைஇய

ஆடுகொள் முரசம் இழுமென

முழங்க' (அகம்.334: 1-2)

(மான் உரிவை) (deer skin)

(7) மானம், துறவு - dignity,

renunciation

'... ... ... .. மானின் உரிவை தைஇய

ஊன் கெடு மார்பின்'

(திருமுரு.128-129)

(இ) அதள் Atal

(வரி அதள்)

(8) கொடுமை, அரியது - cruel,

difficult

'பெருங்களிற்று மருப்பொடு

வரி அதள் இறுக்கும் அறன் இல்

வேந்தன் ஆளும் வறன் உறு

குன்றம் பல விலங்கினவே'

(அகம்.109: 13-14) )

(9) மகிழ்ச்சி - glad

'இருங்கேழ் வயப்புலி வரி அதட்

குவைஇ, விருந்து இறை நல்கும்

நாடன்' (புறம்.371: 14-15)

(கிடாய் அதன்)

(10) பாதுகாப்பு - protection, security

'அதளோன் துஞ்சும் காப்பின்

உதள' (பெரும்.151)

(உழை அதள்)

(11) காப்பு - guard, safe

'இலை வேய் குரம்பை உழை அதட்

பள்ளி .. .. .. .. சிலையுடைக்

கையர் கவலை காப்ப' (மது.310-

312)

(ஈ) உரிவை (அரியின் உரிவை)

Ariyin urivai

(12) அச்சம்

'வளையுடைக் கையில் சூலமேந்தி

கரியின் உரிவை போர்த்து

அணங்காகிய வரியின் உரிவை

174