பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நஞ்சு

'களம் நிலவு நஞ்சணிந்தார்

பாலனையும் கவுணியனார்'

(பெரிய 2036: 7-8)

(5) செவ்வியின்மை

'விரகர் இருவர் புகழ்ந்திடவே

வேண்டும் விரல் நிறைய

மோதிரங்கள் வேண்டும் அரை

யதனில் பஞ்சேனும் பட்டேனும்

வேண்டும் அவர்கவிதை நஞ்சேனும்

வேம்பேனும் நன்று' (தனிப்.3)

(ஆ) கடு Katu)

(6) வெறுப்பு - hatred

'ஆணமில் நெஞ்சத்து அணிநீலக்

கண்ணார்க்குக் காணமிலாதவர்

கடு அனையர் - காணவே

செக்கூர்ந்து கொண்டாரும் செய்த

பொருளுடையார் அக்காரம்

அன்னார் அவர்க்கு ' (நாலடி.374)

(7) கொடியவர் - cruel

'கடைந்தார் வெருவுற மீது எழு

கடு ஆம் எனக் கொடியார்'

(கம்ப ஆரண்.455; 4)

(8) துன்பம் | ஊறு - inflict, injury

'ஊறு அளாவிய கடு என

உடலிடை நுழைய' (கம்ப.சுந்.1097:

4)

(இ) தீ (விடம்) TIT

(9) வேகம், வெம்மை - quick

'வேக வெந்தீ நாகம் கிடந்த'

(மணி.20: 98)

(ஈ) நஞ்சு உண்ணல் Nancu unnal

(10) சாதல்

'விண்ணோர் அமுதுண்டும் சாவ

ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு

இருந்தருள் செய்குவாய்' (சிலப். 12:

22)

(11) உய்வு

'புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு

நஞ்சுண்ண ' (பெரிய,363: 3-4)

(உ) காளவிடம் Kalavitam

(12) கருமை, இருள்

'காளவிடம் உண்டிருண்ட

கண்டர்பணிக் கலன் பூண்டு'

(பெரிய 21.199)

(ஊ) விடம் Vitam


நந்து


தீமை

'தீய விடம் தலைக்கொள்ளத்

தெருமந்து செழுங்குருத்தை'

(பெரிய 21.206)

வேகம்

'பொருந்திய விட வேகத்தில்

போதுவான் வேகம்' (பெரிய.25.26)

(13) நீல நிறம்

'நீலம் ஆர் கடல் விடந்தனை

உண்டு ' (சுந் தேவா.828: 5)

நடுகல் Natukal (hero stone)

(1) சிறப்பு - eminence

'காட்சி கால்கோள் நீர்ப்பை நடுகல்

சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை

வாழ்த்தல்' (தொல், 1006)

(2) வீரம் - valour

‘விழுத்தொடை மறவர் வில்லிடத்

தொலைந்தோர் எழுத்துடை நடுகல்

அன்ன ' (ஐங்.352: 1-2)

(3) நிலைபேறு - stability)

... .. .. .. சிறுவழி மடங்கி

நிலைபெறு நடுகல் ஆகியக்

கண்ணும்' (புறம்.223: 2-3)

(4) இறப்பு - death

'கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி, நடு

கல்லின் அரண் போல' (பட்,78-79)

(5) புகழ் - fame

செல்லா நல்லிசைப் பெயரொடு

நட்ட கல்ஏசு கவலை எண்ணுமிகப்

பலவே' (மலை.388-389) :

நந்து Nantu (conch)

(1) குறைந்த அறிவு - lesser perception

'நந்தும் முரளும் ஈர் அறிவினவே'

(தொல்.1528)

(ஆ) நத்து Nattu

(2) வளன் - fertile

'நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய

வாளை, வித்தி அலையில்,

விளைக! பொலிக! என்பார்'

(பரி.10:85-86)

(3) சேமிப்பு – save / store

'தந்தம் பொருளும் தமர்கண்

வளமையும் முந்துற நாடிப் புறந்தரல்

ஓம்புக அந்தண் அருவி மலைநாட!

சேணோக்கி நந்துநீர் கொண்டதே

போன்று.' (பழமொழி.205)


176