பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நரை

(ஈ) நரியின் ஒலி Nariyin oli

(8) இறப்பு, தீமை - death, evil

'பிறவோர் இறந்த வழுவிளிப்

பூசலும் நீண்முக நரியின்

தீவிளிக் கூவும்' (மணி.6: 73-74)

(உ) நரி வரால் கவ்வச் சென்று

நற்றசை இழந்தது Nari varal kavvac

cenru narracai ilantatu

(9) பேராசை - avarice

'நரி வரால் கவ்வச் சென்று

நற்றசை இழந்தது ஒத்த

தெரிவரான் மால்கொள் சிந்தை

தீர்ப்பதோர் சிந்தை செய்வார்'

(திருநா.தேவா. 118: 1-4)

(ஒப்பு) Fox, Jackal அறிவுநுட்பம்,

தனிமை, வளமை; இறப்பு, இரத்த

தாகம், கழிகாமம், கொடூரம்,

தந்திரம், திருட்டுத்தனம், தீமை,

நன்றியற்ற நிலை,பாலியல்,

பாழ்நிலை, பேராசை,

போலிப்புகழ்ச்சி, மறைத்தல்,

வஞ்சகம்.

நரை Narai (grey hair)

(1) மூப்பு | முதுமை -ageing, old age

'அரி நரைக் கூந்தற் செம் முது

செவிலியர்' (நற்.110: 6)

(2) மனக்கவலை - worry

'யாண்டு பல ஆக, நரை இல

ஆகுதல் யாங்கு ஆகியர்! என

வினவுதிர் ஆயின், மாண்ட என்

மனைவியொடு, மக்களும்

நிரம்பினர்; யான் கண்டனையர்

என் இளையரும்; வேந்தனும்

அல்லவை செய்யான், காக்கும்;

அதன் தலை ஆன்று அவிந்து

அடங்கிய கொள்கைச் சான்றோர்

பலர், யான் வாழும் ஊரே'

(புறம்.191)

(௩) வெண்மை - white

'நறுவிரை துறந்த நரை வெண்

கூந்தல்' (புறம் 276: 1)

(4) அறிவு, திறமை - wise, capable

'வலம்புரி புரையும் வால் நரை

முடியினர்' (திருமுரு.127)


நன்னன்


நல்கூர்ந்தார் மேனி Nalkurntar meni

(poor (man's) body)

(1) பொலிவின்மை - dull | dismal |

gloomy)

'கல்பயில் கானம் கடந்தார் வர,

ஆங்கே நல்லிசை ஏறொடு வானம்

நடுநிற்பச் செல்வர் மனம்போல்

கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்

மேனிபோல் புல்லென்ற காடு'

(கார்.18)

நல்லறத்தோர் பொருள் Nallarattor porul

(wealth of the virtuous)

(1) நிலைத்தன்மை / பொலிவி -

stable, bright

'ஞாலம் நுங்குறு நல்லறத்தோர்

பொருள் போல நின்று பொலிவது

பூம் பொழில்' (கம்ப.கிட்.755: 1-2)

நல்லார் Nallar (the noble)

(1) மென்மை - tender; soft

'மெல்லிய நல்லாருள் மென்மை

அதுவிறந்து ஒன்னாருள்

கூற்றுட்கும் உட்குடைமை'

(நாலடி.188: 1-2)

நவமி முன்னாள் (அட்டமி) Navami

munnal (eight phase of the moon)

(1) வெற்றி - victory, success

'பற்றலர் முனைகள் சாய்க்கும்

பட்டவர்த்தனமாம் பண்பு பெற்ற

வெங்களிறு கோலம் பெருகுமா

நவமி முன்னாள்' (பெரிய.561: 5-8)

நளினை Nalinai (a lady)

(1) கற்பு - chastity

'நாரார் கற்பின் நாகிள

வேய்த்தோள் நளினைக்கும்'

(சீவக. 1635:3)

நன்னன் Nannan (a king)

(1) அநீதி - injustice

'பெண்கொலை புரிந்த நன்னன்

போல வரையா - நிரையத்துச்

செலீஇயரோ, அன்னை!'

(குறு.292: 5-6)

(2) நன்மை - goodness


178