பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாவி

இன்னிசைக் கொளீ இயதன்'

(பெருங். இலா.9: 46-48)

நாவி (கத்தூரி) Navi

(1) நறுமணம் - fragrance

'நாவி நாறுஎழில் மேனியைக்

கண்டு கண்டு ' (சீவக.346:3)

நாவிதன் வாள் Navitan val (barber's

sword)

(1) தகுதியின்மை - incompetent/

meritless

'காத்தாற்று கிற்பாரைக் கண்டால்

எதிருரையார் பார்த்தாற்றா

தாரைப் பரியாது மீ தூர்தல்

யாத்ததே சில்லார் படையாண்மை

நாவிதன் வாள் சேப்பிலைக்குக்

கூர்த்து விடல்' (பழமொழி. 319)

நாவும் வாயும் உலர்தல் Navum vayum

ulartal (dryness of tongue and mouth)

(1) தீமை, அழிவு - bad omen

'நாவும் வாயும் உலர்ந்தன .. ..

(கம்ப.யுத்.3663: 3)

நாள்மீன் - கோள் மீன் Nalmin -

kolmin (star - planet)

(1) தடை - obstruction / obstacle

'நாளும் கோள் மீன் தகைத்தலும்

தகைமே' (கலி.5:9)

(2) பன்மை - multirole

'வாள் நிற விசும்பின் கோள்மீன்

சூழ்ந்த ' (சிறுபா.24: 2)

நான்கு Nanku (four)

(1) வேதம் – veda / scripture

'நாவில்நாலர் உடல் அஞ்சினர்'

(திருஞான. தேவா.2428: 3)

(2) அந்தக்கரணம் - sence organs

‘நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய்'

(திருஞான. தேவா,3847; 2)

(ஆ) நாலு Nalu

வேதம்

'நாலு கொலாம் மறை பாடின

தாமே' (திருநா.தேவா,974: 4)


நிரையம்


நான் மூன்று Nanminru

(1) இராசிகள் – signs of zodiac

'அறுமூன்றும் நான்மூன்றும்

ஆனார் போலும்'

(திருநா.தேவா.820: 2)

நானநீர் (புனுகு) Nananir

(1) உயர்வு - lofty

'மெய்யணி பசும்பொன் சுண்ணம்

மேதகு நானம் நீரின்' (சீவக.117:

1)

நிம்பம் (வேப்பிலை) Nimpam (neem)

(1) காப்பு - protection

'நிம்ப முதலான கடி நீடுவினை

செய்வார்' (பெரிய, 1941: 7-8)

நிரையம் Niraiyam (hell / hades)

(1) நயமின்மை - unfair

வரையா நயவினர் நிரையம்

பேணார்' (நற்.329: 1)

(2) இன்னாமை, இழிவு - bad, low

'.. ... ... ... இவ் ஊர் நிரையப் பெண்

இன்னா கூறுவ புரைய அல்ல, என்

மகட்கு எனப் பரை இ'

(அகம்.95: 11-13)

(3) பொய் - false / untrue

'நிரம்ப நிரையத்தைக் கண்டந்

நிரையம் வரம்பில் பெரியானும்

புக்கான் - இரங்கார் கொடியார

மார்ப! குடிகெட வந்தால் அடிகெட

மன்றி விடல்' (பழமொழி. 288)

(4) தீவினை , துன்பம் - sin, suffering

'தம்மை இகழ்ந்தமை

தாம் பொறுப்பது அன்றிமற்

றெம்மை இகழ்ந்த

வினைப்பயத்தால் உம்மை

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்

என்று பரிவதூஉம் சான்றோர்

கடன்' (நாலடி.58)

(5) துன்பம், அழிவு - suffering,

destruction -

வெவ்வாய் நிரயத்திடை வீழ

விரைந்து வீந்தான்' (பெரிய.997:

7-8)

(ஆ) தீயுழி Tiyali

(6) கேடு - harm


180