பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்


(ஆ) நுரைக்குமிழி Nuraikkumili

(foam bubble)|

(8) அழகு, நிலையாமை - beauty,

neverlosting

'காமர் நுரைக்குமிழி

எழுந்திழிவன போல் விளங்கு

பெருங் காட்சித்தாக' (பெரிய, 1998:

7-8)

நூல் Nul (thread, string)

(1) நெகிழ்வு - loose

விழுமிது கழிவது ஆயினும்,

நெகிழ்நூல் பூச் சேர் அணையின்

பெருங் கவின் தொலைந்த நின்'

(குறு.253: 2-3)

(2) இணைப்பு - bind

'தண் நறு முகையொடு வெண் நூல்

சூட்டி ' (அகம்.136: 14)

(3) மென்மை - soft

'மென் நூற் கலிங்கம் கமழ் புகை

மடுப்ப' (மது.554)

(4) மெலிவு - lean

'நூன்மலிந்த நுண்ணுசுப்பு நோவ

வந்து நோக்கினார்' (சீவக.1105: 4)

(ஒப்பு) Thread இணைத்தல்,

ஏறுதல், கட்டுதல், தப்பித்தல்,

நெய்தல், பாதுகாப்பு, வளமை,

வாழ்க்கை.

நூல் அறு முத்து Nul aru muttu

(unstringed pearls)

(1) சிதறல் - scatter

'நூல் அறு முத்தின் காலொடு

பாறித் துறைதொறும் பரக்கம்'

(குறு.51: 2-3)

நூல் சீலை Nul cilai (thread cloth)

(1) அழிவு, நிலையாமை - destroy,

unstable

'நூற்றுப்பத்து ஆயிரம்

பொன்பெறினும் நூல்சீலை

நால்திங்கள் நாளுக்குள்

நைந்துவிடும்' (தனிப்:33: 1-2)

நூலும் நாரும் Nulum narum (thread

and fiber)

(1) பொருத்தமின்மை - unmatched


நெஞ்சம்


'நூலு நாரு மிசைத்தன வொத்தலா

நீலகேசி நெடுங்கணாள் சொல்லு

மாலும் பேயு முடையவர்

செய்கையே போலு நீ சொன்ன

புத்தர் சரிதையே' (நீலகேசி.207)

நெஞ்சம் Nencam (heart)

(1) மயக்கம் - unclear, confused

'மையல் நெஞ்சம் என் மொழிக்

கொளினே!' (நற்.146: 11)

(2) அன்பு - love

'காமர் நெஞ்சம் துரப்ப' (நற்.250: 5)

(3) நட்பு - friendship

'அன்புடை நெஞ்சம் தாம்

கலந்தனவே' (குறு.40: 5)

(4) துன்பம் - suffering

'அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே'

(குறு.43: 5)

(5) தூய்மை - pure

'துட்கென்றன்று என் தூஉ

நெஞ்சம்' (குறு.157: 2)

(6) மாண்பு - noble

'ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை

நெஞ்சம்' (குறு.184: 4)

(7) அருள் - mercy

'அருள் புரி நெஞ்சம் உய்த்தர'

(ஐங்.362: 4) |

(8) நாணாமை - skyless, not bashful

'நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும்

காண்பல்' (கலி.121: 11)

(9) மருட்சி

'மருளி நெஞ்சம் மகிழ்தலும்

காண்பல்' (கலி.121: 15)

(10) வலிமை - strong

'வினை நசைஇப் பரிக்கும் உரன்

மிகு நெஞ்சமொடு' (அகம்.215: 3)

(11) நினைதல் - remembrance

'துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து

உடையேமா இன்னும் இழத்தும்

கவின்' (குறள்.125: 10)

(ஆ) உள்ளம் Ullam

(12) அழிவின்மை - undestroyed

'அழிவு இல் உள்ளம் வழிவழிச்

சிறப்ப' (அகம்.47: 1)

(13) அழிவு - destroyed

'அழிவுடை உள்ளத்து ஆரஞர்

ஆட்டி போதவிழ் . புரிகுழல்

பூங்கொடி நங்கை ' (சிலப். 13: 80-81)


185