பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

'கண் நேர் ஒப்பின் கமழ் நறு

நெய்தல் அகல் வரிச் சிறு மனை

அணியும் துறைவ!' (நற்.283: 2-3)

(5) தண்மை - cool

'கனைத்த நெய்தற் கண்போல்

மாமலர் நனைத்த செருந்திப்

போதுவாய் அவிழ, மாலை

மணி இதழ் கூம்ப, காலைக்

கள் நாறு காவியொடு தண்ணென

மலரும்' (அகம்.150: 8-11)

(6) மருதத்திணை - cultivable lands

'நாற விண்டன நெய்தலும்

நாண்மது' (சூளா.19: 1)

(ஆ) வறு நீர் நெய்தல் Varu nir

neytal

(7)வீண் - vain, futile, ruin

'வறு நீர் நெய்தல் போல, வாழாள்

ஆதல் சூழாதோயே'

(நற்.183: 10-11)

நெய்தல் Neytal (பறை)

(1) இறப்பு, நிலையாமை - death,

transitoriness

'ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப..

..இன்னாது அம்ம இவ் உலகம்'

(புறம்.194: 1,2,..6)

(2) இறப்பு - death

‘முற்றம் தோறும் மூதூர் அறிய

நெய்தல் புலைய நெறியில் காற்றி'

(பெருங். உஞ்,36: 157-158)

நெருஞ்சி Neruici (a plant / flower)

(1) கொடுமை - cruelity

'புன்புலத்து அமன்ற சிறியிலை

நெருஞ்சிக் கட்கு இன் புதுமலர்

முட்பயந்தா அங்கு ' (குறு.202: 2-3)

(2) தலைவி - heroine

'ஞாயிறு அனையன் - தோழி!

நெருஞ்சி அனையஎன்

பெரும்பணைத் தோளே'

(குறு.315:3-4)

(3) வளனின்மை , பாழிடம் - unfertile,

ruin

'பீர் இவர் வேலிப் பாழ் மனை

நெருஞ்சிக் காடுறு கடு நெறி ஆக

மன்னிய' (பதி.26: 10-11)

(4) சார்ந்தியக்கம் - dependence


நெல்


'. .. .. .. வானிடைச் சுடரோடு

திரிதரும் நெருஞ்சி போல'

(அகம்.336: 17-18)

(5) செழிப்பு - fertile

'சிறு பூ நெருஞ்சியோடு அறுகை

பம்பி ' (பட்.256)

(6) துன்பம் - suffering

'அனிச்சமும் அன்னத்தின்

தூவியும் மாதர் அடிக்கு,

நெருஞ்சிப் பழம்' (குறள். 1120)

(7) வேட்கை / விருப்பம்

'அருந்தவர்க்கு ஆயினும்

திருந்துமுகம் இறைஞ்சாது

செங்கதிர் விரும்பும் பைங்கொடி

நெருஞ்சிப் பொன்புனை மலரின்

புகற்சி போல வெறுத்த வேட்கைத்

தாமுளம் சிறப்ப' (பெருங். இலா.4:

13-16)

நெல் Nel (paddy)

(1) வளன் | செழிப்பு - fertile

வண்டு மூசு நெல்லிடை மலரும்

அரியல் அம் கழனி ஆர்க்காடு

அன்ன ' (நற்.190: 5-6)

(2) இன்றியமையாமை - necessary,

essential, indespensable

'நெல்லும் உயிர் அன்றே; நீரும்

உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே

மலர்தலை உலகம்' (புறம்.186: 1-2)

(3) வழிபாடு - worship

நெல் உகுத்துப் பரவும் கடவுளும்

இலவே' (புறம்.335: 12)

(4) பயன் - useful

'நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு

நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும்

உண்டு ' (நாலடி,221:3-4)

(ஆ) பழம் நெல் Palam nel (old

grain)

வளமை - fertile

'.. .. ஆறாஅ யாணர், பழம்

பல் நெல்லின் குடிப் பரவை'

(அகம்.44: 15-16)

(இ) செந்நெல் Cennel)

வளமை - fetile / anspicious

'செழுந்துபடச் செந்நெல்நிறைத்

தந்நுண்கொடி அறுகின்'

(சீவக.2486: 3)


187