பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பம்பை

ஆற்றல், போர்,

விண்ணுலகு, விளையாட்டுத் தனம்.

பம்பை Pampai (a drum)

(1) துன்பம் - affliction

பைதல் பம்பை இடங்கள் எருக்கி'

(பெருங். உஞ்.36: 159)

பயின் (பிசின்) Payin (gum)

(1) தகவின்மை - unworthy

'நயவார்கண் நல்குரவு நாணின்று

கொல்லோ பயவார்கண் செல்வம்

பரம்பப் பயின்கொல்

வியவாய்காண் வேற்கண்ணாய்

இவ்விரண்டும் ஆங்கே நயவாது

நிற்கு நிலை' (நாலடி.267)

பருத்தி Parutti (cotton)

(1) எளிமை - simple, easy

'பருத்தி வேலிச் சீறூர் மன்னன்'

(புறம்.299: 1)

(2) வேனிற்பருவம் - summer

'கோடைப் பருத்தி வீடுநிறை

பெய்த' (புறம்.393: 12)

பருந்து Paruntu (hawk)

(1) உயர்ச்சி - lofty, high

  • ஈன் பருந்து உயவும் வான் பொரு

நெடுஞ்சினை ' (நற்.3: 1)

(2) பகை, வெற்றி - enimity, victory

'பருந்து வீழ்ந்து எடுத்த பைந்

தலை அரவம்' (ஐங்.தி.1: 2)

(3) திறன் - capability

'பருந்து எறிந்தற்றாக் கொள்ளும்'

(கலி.82: 27)

(4) போர் - war

'என்றூழ் நின்ற புன் தலை

வைப்பில், பருந்து இளைப்படூஉம்

பாறு தலை ஓமை'

(அகம்.21: 14-15)

(5) குறிதவறாமை - aim, target, purpose

'எறி பருந்து உயவும் என்றூழ் நீள்

இடை ' (அகம்.81:9)

(6) அழிவு - destroy

'உரைத்தவர் நாவோ பருந்தெறியா

தென்று சிலைத்தெழுந்து செம்மாப்

பவரே - மலைத்தால் இழைத்த

திகவா தவரைக் கனற்றிப்


பருந்து


பலிப்புறத் துண்பார் உணா'

(பழமொழி. 295)

(ஆ) கழுகு Kaluku (vulture)

(7) இறப்பு - death

'கருங்கட் காக்கையொடு கழுகு

விசும்பு அகவ, சிறு கண் யானை

ஆள் வீழ்த்துத் திரிதரும் நீள்

இடை அருஞ்சுரம் என்ப'

(ஐங்.314: 2-4) |

(8) விரைவு / வேகம் - fast, quick

'சேயொளிச் சிறையவேகக்

கழுகினுக்கு அரசு செய்வேம்'

(கம்ப.கிட் 991: 2)

(இ) உவணம் Uvanam (eagle)

(9) வலிமை - strong

'விடமுடை அரவின் உடல் உயிர்

உருங்கு உவணம்' (பரி.4: 42)

(10) உயர்வு - high, lofty

'வென்றி வேந்தரை வருக என்று

உவணம் வீற்றிருந்த பொன்

திணிந்த தோட்டு அரும் பெறல்

இலச்சினை போக்கி'

(கம்ப.அயோ ,72: 1-2)

வேகம்

'அஞ்சுவணத்தின் ஆடை

உடுத்தாள் அரவு எல்லாம்

அஞ்சுவணத்தின் வேகம்

மிகுந்தாள் அருள் இல்லாள்'

(கம்ப.சுந்.173: 1-2)

(ஈ) உவணக்கொடி Uvanakkoti

(11) உயர்வு | நிலைபேறு - lofty /

eternal, perpectual

'செவ்வாய் உவணத்து உயர்

கொடியோயே' (பரி.2: 60)

(உ) எருவை Eruvai

(12) கொடுமை - cruel

'அமர்க்கண் அமைந்த அவிர்

நிணப் பரப்பின் குழூஉச் சிறை

எருவை குருதி ஆர' (பதி.67: 8-9)

இறப்பு - death -

'குருதி ஆடிய புலவுநாறு

இருஞ்சிறை எருவைச் சேவல்

ஈண்டுகிளைத் தொழுதி பச்சூன்

கொள்ளை சாற்றி, பறைநிவந்து'

(அகம்.381:9-11)


191