பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பலவின்கனி ஈ

செந் நாவின் மணி ஓர்த்தன்ன

தெண் குரல் கணி வாய், பல்லிய

காடு இறந்தோரே!'

(அகம்.151: 12-15)

(ஒப்பு) Lizard ஆரோக்கியம்,

இனப்பெருக்க வளம், இராணுவ

போர்முறைத் திறம், கடவுட்பற்று,

தெய்வீக அகத்தூண்டுதல், பாசம்,

பொறுப்பு, மறுபிறப்பு, விவேகம்,

வெட்கம்; தீமை, பகைமை

எண்ணம்.

பலவின்கனி ஈ Palavinkani 1 (fly in

jack-fruit)

(1) அழிவு - annihilation

'வாணார் நுதலார் வலைப்பட்டு

அடியேன் பலவின்கனி ஈயது

போல்வதன்முன் ஆணோடு

பெண்ணாம் உருவாகி நின்றாய்'

(சுந். தேவா .770: 5-7)

பலவு Palavu (jack-fruit)

(1) இனிமை - sweetness

செங் காற் பலவின் தீம் பழம்

மிசையும்' (நற்.232: 5)

(2) வளமை, அழகு - luxuriant,

elegant

பலவு உறு குன்றம் போல, பெருங்

கவின் எய்திய அருங் காப்பினளே'

(நற்.253: 8-9)

(3) பயன் - useful

'பயம் கெழு பலவின் கொல்லிக்

குடவரை' (நற். 192: 8)

(4) பேரளவு, காமம் - large, passion

'வேரல் வேலி வேர்க் கோட்

பலவின் சாரல் நாட செவ்வியை

ஆகுமதி .. .. .. சிறுகோட்டுப்

பெரும் பழம் தூங்கியாங்கு,

இவள் உயிர் தவச்சிறிது;

காமமோ பெரிதே!' (குறு.18)

(5) நறுமணம் - fragrance

'கலை தொட இழுக்கிய பூநாறு

பலவுக்கனி' (குறு.90: 4)

(6) செல்வம் - wealth

'இன் தீம் பலவின் ஏர் கெழு

செல்வத்து' (அகம்.282: 11)

(ஆ) ஆசினி Acini


பவழம்


(7) எளிமை - simple

'பேதை ஆசினி ஒசித்த' (நற்.51: 10)

வளமை - luxuriant ,

'கடுங்கண் மழவர் களவு, உழவு

எழுந்த நெடுங்கால் ஆசினி

ஒடுங்காட்டு உம்பர்'

(அகம்.91:11-12)

(இ) பலா Pala

பயன், இனிமை - use, sweetness

'ஊழாயி னாரைக் களைந்திட்

டுதவாத கீழாயி னாரைப்

பெருக்குதல் எ யாழ்போலும்

தீஞ்சொல் மழலையாய்! தேனார்

பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு

விடல்' (பழமொழி.104)

(ஈ) கோளிப்பாகல் Kolippakal

(8) மாண்பு, மாட்சி - noble,

honourable

'இடைக்குல மடந்தையர் இயல்பில்

குன்றா மடைக்கலம் தன்னொடு

மாண்புடை மரபில்

கோளிப்பாகல் கொழுங்கனித்

திரள்காய்' (சிலப். 16: 22-24)

பவகாரணி Palakarani (a pond)

(1) புனிதம், சிறப்பு, கடவுட்டன்மை -

holy, special, devine

விண்ணோர் ஏத்தும் வியத்தகு

மரபில் புண்ணிய சரவணம்

பவகாரணியோடு இட்டசித்தி

எனும் பெயர் போகி' (சிலப். 11:

93-95)

பவழம் Pavalam (Coral)

(1) சிவப்பு நிறம் - red

'பவழத்து அன்ன மேனி'

(குறு.கட.வா; 2) |

(ஆ) பவளம் Pavalam (red)

சிவப்பு நிறம்

பவளச் செவ்வாய்ப் பைங்கிளி

கவரும்' (நற்.317: 4)

(இ) துப்பு Tuppu

சிவப்பு நிறம் - red

'அத்தச் செயலைத் துப்பு உறழ்

ஒண் தளிர்' (ஐங்.273: 1)

193