பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாகு


கொள்வானும் போன்ம்' (கலி.103:

30-31)

அறிவு - knowledge

‘நூல் அறி வலவ!' (அகம், 114: 8)

பாகு Paku (syrup)

(1) இனிமை - sweet

'கோகிலம் நவில்வன இளையவர்

குதலைப் பாகு இயல் கிளவிகள்

அவர் பயில நடமே' (கம்ப.பால.81:

1-2)

பாகு (வெற்றிலை) Paku (betel leaf)

(1) பசுமை நிறம் - green

'பசுங்கிளிச் சிறையெனப் பக்க

நிறைத்த பாகும் சாந்தமும்

போகமொடு புணர்ந்த'

(பெருங். இலா.3: 62-63)

பாகு (பாக்கு) Paku (areca nut)

(1) தூய்மை - purify

‘நிறந்தூய்தா நீரினால்

வாய் தூய்தாம் பாகால்'

(நீலகேசி,278: 1)

பாசி Paci (moss)

(1) அசைவு - move

'கிடங்கில் அன்ன இட்டுக் கரைக்

கான் யாற்றுக் கலங்கும் பாசி நீர்

அலைக் கலாவ' (நற்.65:2-3)

(2) நிலையாமை - impermanent

'ஊர் உண் கேணி உண் துறைத்

தொக்க பாசி - அற்றே பசலை -

காதலர் தொடுவுழித் தொடுவுழி

நீங்கி, விடுவுழி விடுவுழிப்

பரத்தலானே' (குறு.399)

(3) நொய்மை - fragile / worn out

'பாசி அன்ன சிதர்வை நீக்கி'

(பெரும்.468)

(4) ஆபத்து - danger

விழுந்தோர் மாய்க்கும் குண்டு

கயத்து அருகா, வழும்பு கண்

புதைத்த நுண் நீர்ப் பாசி அடி

நிலை தளர்க்கும் அருப்பமும்

உடைய' (மலை. 220-222)

(5) திறனின்மை - incapacity

'பரந்த திறலாரைப் பாசிமேல்

இட்டுக் கரந்து மறைக்கலும்

ஆமோ? - நிரந்து எழுந்து வேயின்


பாதிரி


திரண்டதோள் வேல்கண்ணாய்

விண் இயங்கும் ஞாயிற்றைக்

கைம்மறைப்பார் இல்' (பழமொழி,

32)

(ஒப்பு) Moss அன்பு, நட்பு,

பணிவு, மறைகாப்பு; சலிப்பு.

பாஞ்ச சன்னியம் Panca canniyam

(conch)

(1) போர் - war

'படை போர் புக்கு முழங்கும் அப்

பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

(நாலா.2: 7-8)

பாடலி Patali (a city)

(1) வளமை | செழிப்பு - luxuriant/

fertile

'பொன்மலி பாடலி' (குறு.75: 4)

பாண்டில் (கண்ணாடி) Pantil (mirror)

(1) தூய்மை / வெண்மை - pure /

white

'தோல் எறி பாண்டிலின் வாலிய

மலர' (அகம்.217: 8)

பாத பீடிகை Pata pitikai (alter (of

Buddha's feet))

(1) புனிதம் - holy

'ஆதி முதல்வன் அறவாழி

ஆள்வோன் பாத பீடிகை

பணிந்தனள் ஏத்தி' (மணி.6: 11-12)

பாதிரி Patiri (a tree)

(1) வேனிற்காலம் - summer

'வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன'

(குறு.147: 1)

(2) கேடின்மை - harmless

'பாதிரிப்பூப் புத்தோடு

பாழ்ப்பினும் தான் பல்வழியும்

தாதுரித்தாம் கேடின்மை என்பது

நுன் தத்துவமோ ' (நீலகேசி.202: 1-

2)

(3) கல்வி, நறுமணம் - education,

fragrance

'கல்லாரே ஆயினும் கற்றாரைச்

சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும்

தலைப்படுவர் தொல்சிறப்பின்


198