பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாம்புறையும் புற்று

(க) மாசுணம் (மலைப்பாம்பு)

Micunam (python)

துன்பம் - affliction

'வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர்

மாசுணம் வரக் கண்டன்ன'

(கம்ப ஆரண்.715:3)

(ஒப்பு) Snake, Python அரச

உரிமை, ஆழம், உள் ஆற்றலின்

வடிவம், ஒளி, கடவுட்டன்மை ,

கவர்ச்சி, குண்டலினி சக்தி,

குணப்படுத்துதல், சக்தி,

செயலறிவு, தெய்வீக உரிமை,

நிலைபேறு, நிலம், போர்முறைத்

திறம், மறுபிறப்பு, மின்னல்,

மீட்பு, முன்னறிவித்தல்,

மறைபொருள், மயக்கநிலை,

மெய்யுணர்வு, வரம்பு கடந்த

நிலை, வலிமை, வலியத் தாக்கும்

தன்மை, வளமை, விழிப்புநிலை;

அடிமைத்தனம், அழிவு, இருள்

இறப்பு, இயற்கையின் ஆபத்தான

வலிமை, கழிகாமம், கீழுலகம்,

சோம்பல், தீமை, தீய

எண்ணங்கள், தண்டனை, பாலியல்

சக்தி, பொறாமை.

பாம்புறையும் புற்று Pampuraiyum purru

(snake mound)

(1) சிற்றறிவுடையார், புன்மை ,

ஆபத்து - petty minded, low,

danger

'கற்றன்னர் கற்றாரைக் காதலர்

கண்ணோடார் செற்றன்னர்

செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென

உற்றது உரையாதார் உள்கரந்து

பாம்புறையும் புற்றன்னர் புல்லறிவி

னார்' (நான்.58)

(ஆ) அரவு உறையும் இல் _Aravu

uraiyum il (snake hut)

(2) துன்பம் - harmful

'ஒடுங்கி அரவு உறையும் இல்

இன்னா' (இன்னா .30: 3)

பாரிசாதம் Paricatam (a flower)

(1) நறுமணம், ஆண்மை - fragrance

பால்


'கடிகமழ் பாரிசாதம்

அதனொடொர் காம வல்லி'

(சூளா . 1563: 5-6)

பால் Pal (milk)

(1) வெண்மை - white

'படு திரை கொழீ இய பால் நிற

எக்கர்' (நற்.49:1)

(2) இனிமை - sweet

'வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி,

தீம் பால்' (நற்.57:5)

(3) பயன் - use

'இன் தீம் பாற்பயம் கொண்மார்'

(நற்.80:2)

(4) வளமை - fertile

'பால் பல ஊறுக! பகடு பல

சிறக்க!' (ஐங்.3:2)

(5) நன்மை - goodness

'பண்பு இலான் பெற்ற

பெருஞ்செல்வம் - நன் பால் கலம்

தீமையால் திரிந்தற்று'

(குறள்.1000)

(6) பெரியார் - the great / noble

'பாலோடு அளாயநீர் பாலாகும்

அல்லது நீராய் நிறந்தெரிந்து

தோன்றாதாம் தேரின் சிறியார்

சிறுமையும் தோன்றாதாம் நல்ல

பெரியார் பெருமையைச் சார்ந்து'

(நாலடி.177)

(7) அறிவுடையார் - wise

'பாலாற் கழீஇப் பலநாள்

உணக்கினும் வாலிதாம் பக்கம்

இருந்தைக்கு இருந்தன்று கோலார்

கடாஅய்க் குறினும் புகலொல்லா

நோலா உடம்பிற்கு அறிவு'

(நாலடி.258)

(8) தூய்மை - pure

'.. .. .. .. பால்போலும்

தூய்மையுள் தோன்றும்

பிரமாணம்' (திரி.37: 2-3)

(9) வாய்மை , உயர்குடியினர்,

நற்பண்பு - truth / noble birth, good

quality

‘சங்கினும் பாலினும் சலமில்

வாய்மை விழுத்திணைப் பிறந்த

ஒழுக்குடை மரபினர்'

(பெருங்.இலா.5: 65-66)

(10) தோற்றம், மாற்றம் - appear,

change


201