பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலை

(2) வேனில் - summer

'நடுவு நிலைத் திணையே

நன்பகல் வேனிலொடு முடிவு

நிலை மருங்கின் முன்னிய

நெறித்தே ' (தொல்,955)

(3) பின்பனி - dew

பின்பனி தானும் உரித்தென

மொழிப்' (தொல்.956)

(4) வெற்றி - victory

'வாகை தானே பாலையது புறனே'

(தொல்.1019)

'தாவில் கொள்கைத் தத்தம்

கூற்றைப் பாகுபட

மிகுதிப்படுத்தல் என்ப'

(தொல்.1020)

(5) வெம்மை - heat

சூழ்கம் வம்மோ - தோழி!

பாழ்பட்டுப் பது அற வெந்த

பாலை வெங்காட்டு' (ஐங்.317: 1-2)

பாலை (மலர்) Palai (a flower)

தூய்மை / வெண்மை - pure /

white

'கொடிறு போல் காய வால்

இணர்ப் பாலை' (நற். 107:3)

பாலை (பண்) Palai (a melody)

(1) உருக்கம் - compassion / melt

தொடை படு பேரியாழ் பாலை

பண்ணி, பணியா மரபின் உழிஞை

பாட' (பதி.46: 5-6)

(2) வளமை - flouriship

'பாணர் கையது பணி தொடை

நரம்பின் விரல் கவர் பேரியாழ்

பாலை பண்ணி, குரல் புணர் இன்

இசைத் தழிஞ்சி பாடி: இளந்

துணைப் புதல்வர் நல் வளம்

பயந்த' (பதி.57: 7-10)

(3) உயிர்ப்பு - life, longing

'வல்லோன் தைவரும் வள் உயிர்ப்

பாலை' (அகம்.355: 4)

(4) இன்பம் - pleasure

'மாறு தலை பெயர்க்கும் மருவு இன்

பாலை' (பொரு.22)

(5) இனிமை - sweetness

'செந்தீத் தோட்ட கருந்துளைக்

குழலின் இன் தீம் பாலை

முனையின்' (பெரும்.179-180)

(6) இதம் - soothing


பாவை


'நைவளம் பழுநிய பாலை

வல்லோன்' (குறி.146)

(ஆ) பஞ்சுரம் Pancuram

(7) மகிழ்ச்சி - joy/ happiness

'வேங்கை கொய்யுநர் பஞ்சுரம்

விளிப்பினும், ஆர் இடைச்

செல்வோர் ஆறு நனி வெரூஉம்'

(ஐங்.311: 1-2)

பாவை Pavai (doll/puppet / statue)

(1) மாட்சி, பெண் - noble, feminine

'வினை மாண் பாவை அன்னோள்'

(நற்.185: 11)

(2)பழியின்மை - faultless

'பாவை அன்ன பழி தீர் காட்சி'

(நற்.252: 7)

(3) வனப்பு | அழகு - beauty /

charm, elegance

'பாவை அன்ன வனப்பினள்

இவள்என' (நற்.301: 6)

{4) அன்பு / நட்பு - love / friendship

'இது என் பாவைக்கு இனிய நன்

பாவை' (ஐங்.375: 1)

(5) பெண்மை | குழந்தைமை -

feminity, childlike

'பந்தும் பாவையும் கழங்கும்

எமக்கு ஒழித்தே ' (ஐங்.377: 4)

(6) தாய்மை - motherhood

'தாய் உயிர் பெய்த பாவை போல,

நலன் உடையார் உயிர்க்கண்

தாவார்' (கலி.22: 5-6)

(7) வெறுமை - desolate, empty

'பொறி செய் புனை பாவை

போல, வறிது உயங்கிச்

செல்வேன், விழுமம் உழந்து'

(கலி.146: 49-50)

(8) பொலிவு - radient, bright

உருவு கிளர் ஓவினைப் பொலிந்த

பாவை' (அகம்.142: 21)

(ஆ) கொல்லிப்பாவை Kollippavai

(statue on killi hills)

மாட்சி

'உரைசால் உயர் வரைக் கொல்லிக்

குடவயின், .. .. .. .. வினை மாண்

பாவை அன்னோள்' (நற்.185: 7-11)

(9) அழியாமை / நிலைபேறு -

undestroyed / stable


203