பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவை

செவ் வேர்ப் பலவின் பயம் கெழு

கொல்லித் தெய்வம் காக்கும் தீது

தீர் நெடுங் கோட்டு. .. .. .. ..

பெரு நிலம் கிளரினும், திரு நல

உருவின் மாயா இயற்கைப்

பாவையின், போதல் ஒல்லாள்

என் நெஞ்சத்தானே' (நற்.201:5-12)

(10) அச்சம், மெல்லியல்பு, தலைவி -

fear, tender, heroine

பெரும்பூண் பொறையன்

பேஎமுதிர் - கொல்லிப் கருங்கண்

தெய்வம் குடவரை யெழுதிய

நல்லியற் பாவை அன்னாம்

மெல்லியற் குறுமகள் பாடினள்

குறினே ' (குறு.89: 4-7)

(11) மடமை - foolish, ignorent

'வல்வில் ஓரி கொல்லிக்

குடவரைப் பாவையின் மடவந்

தனளே ' (குறு.100: 5-6)

(12) புகழ் | கடவுட்டன்மை - fame /

divine

' ... ... ... பயங்கெழு கொல்லி

நிலைபெற கடவுள் ஆக்கிய

பலர்புகழ் பாவை அன்னநின்

நலனே ' (அகம்.209: 15-17)

(இ) ஆடிப்பாவை Atippavai

(mirror image / puppet)

(13) முடிவெடுக்கும் தன்மையின்மை -

indecisive

'கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல, மேவன

செய்யும்' (குறு.8: 4-6)

(ஈ) பனிப்பாவை Panippavai (dew

doll / pollen doll) |

(14) குளிர்ச்சி, உருகும் தன்மை ,

நிலையாமை - cool, melting, not

durable

'தாதிற் செய்த தண்பனிப் பாவை

காலை வருத்துங் கையா

றோம்பென' (குறு.48: 1-2)

(உ) பொன்செய் பாவை Poncey

pavai (gold statue)

(15) செல்வம் | வளமை - wrath

'பொன்செய் பாவை கொடுப்பவும்

கொள்ளான் பெண்கொலை புரிந்த

நன்னன் போல' (குறு.292; 4-5)

(16) அழிவின்மை - indestructible

பாவை


‘தா இல் நன் பொன் தைஇய

பாவை' (அகம்.212: 1)

(ஊ) மணல் பாவை Manal pavai

(sand doll / mud statue)

(17) நிலையாமை / அழிவு - unstable/

ruin -

'.. .. .. மணலின் எழுதிய பாவை

சிதைத்தது என அழ'

(பரி.7: 25-26)

(18) பயனின்மை - useless / waste

'நுண் மாண் நுழை புலம்

இல்லான் எழில் நலம் மண் மாண்

புனை பாவை அற்று' (குறள்.407)

(எ) உப்புப்பாவை Uppuppavai (salt

statue)

நிலையாமை, அழிவு

impermanent, ruin/ death

'உப்பு இயல் பாவை உறை உற்றது

போல, உக்கு விடும் என் உயிர்'

(கலி.138: 16-17)

(ஏ) மரப்பாவை Marappavai

(wodden doll)

(19) உள்ளீடின்மை - coreless

'நாண் அகத்து இல்லார் இயக்கம் -

மரப்பாவை நாணால் உயிர்

மருட்டியற்று' (குறள். 1020)

(20) உயிர்ப்பின்மை - lifeless

'இரப்பாரை இல்லாயின், ஈர்ங்கண்

மா ஞலம் மரப்பாவை சென்று

வந்தற்று' (குறள்.1078)

(ஐ) பவளப்பாவை Pavalappavai

(coral statue)

(21) அழகு - beauty

'பளிங்கு புறத்தெறிந்த பவளப்

பாவையின் இளங்கொடி

தோன்றுமால் இளங்கோ

முன்னென்' (மணி.4: 124-125)

(ஓ) பனிநீரால் பாவை செய்தல்

Paniniral pavai ceytal (make a dew

doll)

(22) பயனின்மை, வீண் – waste, useless

| futile

'தொண்டெலாம் இசைபாடத்

தூமுறுவல் அருள்செய்யும்


204