பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணர் துணையோடு ஆடும்...

'புண் தோய்த்தெடுத்த

பொருவேலெனச் சேந்து நீண்ட

கண் போன்ற' (சீவக பதி.26: 1-2)

புணர் துணையோடு ஆடும்

பொறியலவன் Punar tunaiyotu atum

poriyalavan

(1) இன்பம் - pleasure

'புணர் துணையோடாடும்

பொறியலவன் நோக்கி

இணர்ததையும் பூங்கானல்

என்னையு நோக்கி

உணர்வொழியப் போன

ஒலிதிரைநீர்ச் - சேர்ப்பன்'

(சிலப்.7.31) |

புத்தன் Puttan (Buddha)

(1) வள்ளன்மை – bounty / liberality

'கண்கொடுத்தான் றடிகொடுத்தான்

கயப்புலிக்குத் தற்கொடுத்தான்

பெண்கொடுத்தான்

உடம்பினையும் பிளந்திட்டுப்

பிறர்க்கீந்தான் மண்கொடுத்தான்

மகக்கொடுத்தான் மன்னுந்தற்

சேர்ந்தார்க்கு விண்கொடுத்தான்

அவன் கொடுத்த விரித்துரைப்பன்

கேளென்றான்' (நீலகேசி.205)

புத்தேள் நாடு Putte] natu (heaven)

(1) பெறற்கருமை - rare / not easily got

'அரிதுபெறு சிறப்பிற் புத்தேள்

நாடும்' (குறு.101: 2)

(2) இனிமை - pleasing / pleasant

'இனிது எனப் படூஉம் புத்தேள்

நாடே?' (குறு.288: 5)

(3) புகழ் - famous

'புகழ்இன்றால் புத்தேள் நாட்டு

உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை?'

(குறள் 966)

(ஆ) புத்தேள் உலகம் Puttel

ulakam

(4) அழகு, புகழ் - beautiful, famous

'புத்தேள் உலகம் கவினிக்

காண்வர, மிக்குப் புகழ் எய்திய

பெரும்பெயர் மதுரை'

(மது.698-699)


புத்தேள் நாடு


(இ) துறக்கம் Turakkam

(5) குற்றமின்மை - blemishless

'மறுஇல் ' துறக்கத்து அமரர்

செல்வந்தன்' (பரி.5: 69)

(6) சிறப்பு - eminent

‘நாறு இணர்த் துழாயோன் நல்கின்

அல்லதை ஏறுதல் எளிதோ, வீறு

பெறு துறக்கம்?' (பரி.15: 15-16)

(7) உயர்வு | மேன்மை - lofty /

glorious

'விளைந்தார் வினையின்

விழுப்பயன் துய்க்கும் துளங்கா

விழுச்சீர்த் துறக்கம் புரையும்'

(பரி.தி.1: 46-47)

பெறற்கருமை - not easily got

'பெறற்குஅருந் தொல்சீர்த் துறக்கம்

ஏய்க்கும்' (பெரும்.388) ..

(ஈ) உயர்நிலை உலகம் Uyarnilai

ulakam

(8)இன்பம் - blizz

‘உயர் நிலை உலகம் உறீ இயாங்கு,

என் துயர் நிலை தீர்த்தல்

நும்தலைக் கடனே'

(கலி.139: 36-37)

புகழ் | உயர்வு - fame / lofty

'இவண் இசை உடையோர்க்கு

அல்லது, அவணது உயர்நிலை

உலகத்து உறையுள் இன்மை '

(புறம்.50: 14-15)

(உ) பொய்தீர் - உலகம் Poytir

ulakam

பெறற்கருமை - not easy to achieve

'பொய் தீர் உலகம் எடுத்த

கொடிமிசை, மை அறு மண்டிலம்

வேட்டனள்' (கலி.141: 11-12)

(ஊ) அமரர் நாடு Amarar natu

(9) பொலிவு - radiant / bright -

'குமரரும் மங்கைமாரும் குழுமலால்

வழுவி விண்நின்று அமரர் நாடு

இழிந்தது என்னப் பொலிந்தது

அவ் அனீக வெள்ளம்'

(கம்ப. பால.789: 3-4)


(எ) உம்பருலகு Umparulaku

இன்பம் -pleasure


208