பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புனல்

(11) தூய்மை - pure

'மாசு போக புனல் படிந்தும்'

(பட் 100)

இயக்கம் - movement / active

'இயங்கு புனல் கொழித்த வெண்

தலைக் குவவு மணல்' (மது.336)

(ஆ) நீர் Nir

(12) இடம்பெயர்வு - move / migrate

'நீர் பெயர்ந்து மாறிய செறி

சேற்று அள்ளல்' (நற்.291: 1)

(13) நன்மை - goodness

நீர் அன நிலையன்; பேர்

அன்பினன் என' (நற்.347: 8)

(14) அளவின்மை - unfathomable

'. .. .. .. விரிநீர் வையக

வரையளவு இறந்த' (நற்.130: 10-11)

இனிமை - sweet

'விருந்தின் தீம் நீர் மருந்தும்

ஆகும்' (நற்.53: 8)

தூய்மை - pure

‘மா நிலம் சேவடி ஆக, தூ நீர்'

(நற்.கட.வா: 1)

(15) இன்றியமையாமை - necessary

'நீர் இன்று அமையா உலகம்

போல' (நற்.1: 6)

(16) வலிமை - strength

'ஊதை தூற்றும் உரவுநீர்ச்

சேர்ப்ப !' (நற்.15:3)

வளமை - fertile

'நீர் அற வறந்த நிரம்பா நீள்

இடை ' (நற்.99: 1)

தண்மை / குளிர்ச்சி - cool

'நீர் அடு நெருப்பின் தணிய'

(நற்.154: 9)

(17) அன்பு - love

'செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம்

தாங்கலந்ததுவே' (குறு.40: 4-5)

(18) இரக்கம் - sympathy

'ஈரம் உடைமையின், நீர்

ஓரனையை' (பதி.90: 14)

விரைவு | இயக்கம் - speed /

moving

'நீர் துனைந்தன்ன செலவின்'

(பதி.தி.1: 9)

தண்மை , அழகு -cool, beauty

தோற்றமும் அகலமும். நீரினுள'

(பரி.4: 29)

(19) தலைவன் -- hero


புனல்


'ஓர் இரா வைகலுள், தாமரைப்

பொய்கையுள் நீர் நீத்த மலர்

போல, நீ நீப்பின், வாழ்வாளோ?'

(கலி.5: 14-15)

(20) தன்னியல்பின்மை / சாரியல்பு -

quality, dependence

'நிலத்து இயல்பான் நீர் திரிந்து,

அற்று ஆகும்' (குறள் 452)

(21) கலத்தல் - mix / mingle

'புலத்தலின் புத்தேள் நாடு

உண்டோ நிலத்தொடு நீர்

இயைந்தன்னாரகத்து' (குறள். 1343)

(23) சிறியார் - lowly

'பாலோடு அளாயநீர் பாலாகும்

அல்லது நீராய் நிறந்தெரிந்து

தோன்றாதாம் தேரின் சிறியார்

சிறுமையும் தோன்றாதாம் நல்ல

பெரியார் பெருமையைச் சார்ந்து'

(நாலடி.177) |

(24) பயன் - usefulness

'நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு

நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும்

உண்டு ' (நாலடி.221:3-4)

(25) மென்மை - smooth / quiet

'சொல்லான் அறிய ஒருவனை -

மெல்லென்ற நீரான் அறிய

மடுவினை ' (நான்.80: 1-2)

(26) செழிப்பு - luxuriant

'நீரான் வீறெய்தும் விளைநிலம்'

(நான்.80: 1)

(27) வழிபாடு - worship

'கருவிரற் செம்முக வெண்பற்சூன்

மந்தி பருவிரலாற் பைஞ்சுனைநீர்

தூஉய்' (திணைமாலை.10:1-2)

(28) பொறை - patience

'பொறை எனும் நீரைப் பாய்ச்சி'

(திருநா தேவா.2921: 4)

(29) அழிவின்மை - non extinct

'நிலனும் நீரும் மாய் நெருப்பும்

காற்றும் என்று உலைவு இல் பூதம்

நான்கு உடைய ஆற்றலான்'

(கம்ப கிட்,116: 1-2)

(30) ஒழுக்கம் - good conduct

'சீர்கெழு நிலத்து வித்திச் சீலநீர்

கொடுப்பிற்றீந்தேன்' (சீவக.2632:

2)

(31) மாண்பு - nobility

'மாட்சி நீரின் மாண்சினை

பல்கிய வேட்கை என்னும்

விழுத்தகு பெருமரம் புணர்ச்சிப்

பல்பூ இணர்த்தொகை ஈன்று


215