பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேய்த்தேர்


'இடம்பட மெய்ஞ்ஞானங்

கற்பினும் என்றும் அடங்காதார்

என்றும் அடங்கார்:

தடங்கண்ணாய் உப்பொடு

நெய்பால் தயிர்காயம்

பெய்தடினும் கைப்பறா

பேய்ச்சுரையின் காய்'

(நாலடி.116)

பேய்த்தேர் (கானல் நீர்) Peytter

(mirage)

(1) ஏமாற்றம், இன்மை - deceit, non

existant

பெரு நீர் ஒப்பின் பேஎய்

வெண்தேர் மரன் இல் நீள் இடை

மான் நசையுறூஉம்' (நற்.84: 4-5)

(2) பொய்த்தோற்றம் – false appearance

'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு

நிலம் படு மின்மினி போல'

(அகம்.67: 15-16)

(ஆ) தேர் Tér

(3) வறட்சி, துன்பம் - drought,

affliction

'தேர் திகழ் வறும் புலம் துழைஇ,

நீர் நயந்து பதுக்கை நீழல் ஒதுக்கு

இடம் பெறாஅ அருஞ் சுரக்

கவலை வருதலின், வருந்திய

நமக்கும் அரிய ஆயின'

(நற்.352: 7-10)

(இ) தேர் நீர் Ter nir

(4) பயனின்மை / வீண் – useless /

waste)

'வான் நீங்கு வைப்பின் வழங்காத்

தேர் நீர்க்கு அவாஅம் கானம்

கடத்திர், எனக் கேட்பின்'

(கலி.7: 2-3)

(ஈ) ஆவி Avi (vapour)

பொய்த்தோற்றம் - false appearance

'.. ... ... ... கனைகதிர் ஆவி அவ்வரி

நீர்என நசைஇ மாதவப் பரிக்கும்

மரல்திரங்கு நனந்தலை'

(அகம்.327: 8-10)

(உ) வெண்தேர் Venter

ஏமாற்றம் - deceit


பொருள்


'கடிதோடும் வெண்தேரை நீராம்

என்றெண்ணி பிடியோடு

ஒருங்கோடித் தாள் பிணங்கி வீழும்'

(ஐந்.ஐம்.36: 1-2)

(ஊ) மதரசம் Mataracam

(5) மாய வாழ்வு - transcient life

'மதரசம் அனையவர் வரமும்

வாழ்வும்' (கம்ப.பால.201:1)

பேரிகைகள் முழக்குவார் இன்றி

ஒலித்தல் Perikaikal mulakuvar inri olittal

(drum resounding without drummers)

(1) தீமை, அழிவு, இறப்பு - bad

omen

'பிடி மதம் பிறந்தன பிறகு

பேரியும் இடி என முழங்குமால்

இரட்டல் இன்றியே' (கம்ப.சுந்.371:

1-2)

பொதியறை (புழுக்கறை) Potiyarai (hot

chamber)

(1) துன்பம் - affliction -

பொதியறைப் பட்டோர் போன்று

மெய் வருந்தி' (மணி.19: 8)

பொதியில் (பொதிகை மலை) Potiyil (a

mountain)

(1) வளமை - fertile

'வளம் கெழு பொதியின் மாமுனி

பயந்த' (சிலப்.8: 8)

பொருநை Porunai (a river)

(1) தண்மை / குளிர்ச்சி, வளம் -

cool/ fertile

'பூந்தண் பொருநைப் பொறையன்

வாழி' (சிலப்.23: 83)

பொருள் Porul (wealth / treasure)

(1) நிலையாமை - unstable

'நில்லாப் பொருட் பிணிச் சேறி'

(நற்.126: 11)

(ஆ) வெறுக்கை Verukkai

நிலையாமை - unstable

223