பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்

(8) மேன்மை / மதிப்பு - eminence /

valuable)

'பொன்னுடைத் தாலி என் மகன்

ஒற்றி' (அகம்.54: 18)

(9) பொலிவு - bright/ radiant

'பொன் செய் கன்னம் பொலிய'

(அகம்.317:8)

(10) தூய்மை , குற்றமின்மை -pure,

blemishless

'மைதீர் பசும்பொன்மேல் மாண்ட

மணியழுத்திச் செய்தது எனினும்

செருப்புத்தன் காற்கேயாம்; எய்திய

செல்வத்தர் ஆயினும் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப் படும்'

(நாலடி.347) |

(11) திருமகள் - goddess of wealth

'புனை பூந்தழை அல்குல்

பொன்னன்னாய்' (ஐந்.ஐம்.14: 1)

(12) ஒப்பற்றது | சிறப்பு

incomparable / great

'பொன் அலது இல்லை பொன்னை

ஒப்ப எனப் பொறையில் நின்றாள்'

(கம்ப .சுந்.1273: 1)

(ஆ) ஆணி Ani

உயர்வு - eminence, lofty

'சேண் உலாமதில் வேணு

மண்ணுளோர் காண மன்றலார்

வேணு நற்புரத் தாணுவின் கழல்

பேணுகின்றனர் ஆணி ஒத்தவரே'

(திருஞா. தேவா.641)

(இ) சூடு உறு பொன் Citu unu

pon (molten gold)

பொலிவு, ஒளி - radiant, glow

'மாடு உறு கிரிகளும் மரனும்

மற்றவும் சூடு உறு பொன் எனப்

பொலிந்து தோன்றுற'

(கம்ப.கிட்.823: 1-2)

(ஈ) வெந்துற பொன் Venturu pon

(13) சிவப்பு நிறம் - red

'வெந்துறு பொன் போல் வீழ்கதிர்

மறைந்த அந்தி மாலை யாயிழை

போகி' (மணி.24: 159-160)

(ஒப்பு) Gold அழிவின்மை ,

அரசத்தன்மை , அறிவாற்றல்,

அன்பு, ஆன்மா, ஆன்ம


பொன் முகலி


ஒளியூட்டல், ஒளி, ஒழுக்கம்,

நிரப்பு, சூரியன், தூய்மை ,

நிலைபேறு, நிறைவளம், நெருப்பு,

புனிதம், மஞ்சள் நிறம், மதிப்பு,

மேன்மை, மருத்துவ குணம்,

வளமை, வெற்றி.

பொன் அணி Pon ani (gold ornament)

(1) சிறப்பு - grand, eminent

'தூய பொன் - அணி சோழன்

நீடூழியார்' (பெரிய.8.3)

(ஆ) பொன்னணிகளைக் களைதல்

Ponnanikalaik kalaital (remove gold

ornaments) |

(2) பிரிவு, தனிமை - saperation,

loneliness

'பூப்பரிவார் பொன்செய்

கலம்பரிவார்' (சீவக.2965: 1)

பொன் உரை கல் Pon urai kal (touch -

stone for gold)

(1) வனப்பு - beauty, glowing

'பொன் உரை கல்லின், நல் நிறம்

பெறூஉம் வள மலை நாடன்'

(நற்.25: 4-5)

(ஆ) கட்டளை Kattalai

(2) அழகு - beautiful

'மின்னின் தூவி இருங்குயில்,

பொன்னின் உரைதிகழ் கட்டளை

கடுப்ப' (குறு.192: 3-4)

(3) உறுதி - firmness

'சால்பிற்குக் கட்டளை யாது

எனின் தோல்வி துலை

அல்லார்கண்ணும் கொளல்'

(குறள்.986)

பொன் முகலி Pon mukali (a river)

(1) குளிர்ச்சி - cool

'குன்றினுக்கு அயலே ஓடும்

குளிர்ந்த பொன் முகலி என்றான்'

(பெரிய 743: 7-8)

(2) புனிதம் - holy, sacred

பொன்முகலித் திருந்தியின் புனித

நெடும் தீர்த்தத்தில்' (பெரிய 1614:

1-2)


225