பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன் நிறம்

(ஆ) முகலி Mukali

(3) செல்வம் - treasure

'திரைகள் திரட்டி வைத்த

திருமுகலியினைச் சார்ந்தார்'

(பெரிய, 10.98)

பொன் நிறம் Pon niram (gold colour)

(1) வணிகர் - merchants

பொன்மலர்க் கண்ணியர்

பொன்செய் சுண்ணமொய்

மின்மலர் மேல் விளங்க

அப்பினார் மென்மலர் அணிநகை

மிளிரும் கோலமோடு இன்மலர்

இருநிதிக் கிழவர் -ஈண்டினார்'

(சூளா .1878)

பொன்னி Ponni (a river)

(1) இறைச்சார்பு - devine

'திங்கள் சூடிய முடிச்சிகரத்து

உச்சியில் பொங்குவெண்

தலைநுரை பொருது போதலால்

எங்கள் நாயகன் முடிமிசை நின்றே

இழி கங்கையாம் பொன்னியாம்

கன்னி நீத்தமே' (பெரிய.55)

(2) புனிதத்தன்மை - holy

'பொன்னி நல்நதி மிக்க நீர்

பாய்ந்து புணரி தன்னையும்

புனிதம் ஆக்குவதோர்'

(பெரிய 404: 5-6)

(3) கடவுட்டன்மை - divinity/ godhood

'அணங்கு நீர்ப்பொன்னி ஆடி

நான்' (பெரிய.514:3)

போதி Poti (pipal tree)

(1) துறவு - asceticism/ renunciation

'போதியின் கீழ் மாதவர் முன்

புண்ணிய தானம் புரிந்த மாதவி

தன் துறவும் கேட்டாயோ தோழீ'

(சிலப்.29:9-10)

(2) பௌத்த சமயம் - Buddhism

'சங்க போதியி லாள்கட்

டயாச்செய' (நீலகேசி.245: 2)

(3) புத்தர், ஞானம் - Buddha,

enlightenment

'போதி யாயுரு வெய்திய புற்கலர்'

(நீலகேசி.248: 1)

போது Potu (bud)


போந்தை


(1) பரத்தையர் - prostitute

'போதார் வண்டூ தும் புனல்வயல்

ஊரற்குத் தூதாய்த் திரிதரும்

பாண்மகனே ' (ஐந்.ஐம்.22: 1-2)

போந்தை Pontai (palmyrah palm)

(1) அரசக்குறியீடு - royal sign-totem

'போந்தை வேம்பே ஆர் என

வரூஉம் மாபெருந் தானையர்

மலைந்த பூவும்' (தொல்.1006: 4-5)

(2) வீரம் - valour

'மறம் கெழு போந்தை வெண்

தோடு புனைந்து' (பதி.51:31)

(3) வன்மை | வலிமை - might

'நெடு வேல் பாய்ந்த மார்பின்

மடல் வன் போந்தையின்,

நிற்குமோர்க்கே ' (புறம்.297:9-10)

(4) செழிப்பு - fertile

'வேம்பும் ஆரும் போந்தையும்

மூன்றும் மலைந்த சென்னியர்'

(புறம்.338: 6-7)

(5) சேரன் - cera king

'இரும் பனம் போந்தைத் தோடும்'

(பொரு.143)

(ஆ) பெண்ணை Pennai

(6) கடவுட்டன்மை - divinity/ godhood

தொன்று உறை கடவுள் சேர்ந்த

பராரை மன்றப் பெண்ணை

வாங்கு மடற் குடம்பை

(நற்.303: 3-4)

(இ) பனை Panai

(7) உயர்வு - lofty, eminent

'அடும்பு இவர் மணற்கோடு ஊர,

நெடும் பனை குறிய ஆகும்'

(குறு.248: 5-6)

(8) பேரளவு - large, big

'தினைத் துணை நன்றி செயினும்

பனைத் துணையாக் கொள்வர்

பயன் தெரிவார்' (குறள். 104)

வன்மை - mighty

'மெய்ம்மையே நின்று மிகநோக்கப்

பட்டவர் கைம்மேலே நின்று

கறுப்பன செய்தொழுகிப்

பொய்ம்மேலே கொண்டவ்

விறைவற்கொன்றார் குறைப்ப

தம்மேலே வீழப் பனை '

(பழமொழி. 280) |


276