பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மகம் Makam (a star)

(1) நீர்வளம் - abundant water

resources

'மழை நீங்கிய மா விசும்பில்

மதி சேர்ந்த மக வெண் மீன்'

(பட்.34-35)

மகர ராசியில் சனிக்கோள் புகுதல்

Makara raciyil canikkol pukutal (Saturn in

caprican)

(1) தீமை, வறட்சி - evil, drought

‘விலங்கல் அமர் புயன் மறந்து

மீன் சனிபுக்கு ஊன் சலிக்கும்

காலம் தானும் கலங்கல் இலா

மனப் பெருவண் கையுடைய

மெய்யர் வாழ் கழுமலமே'

(திருஞான. தேவா.3843: 5-8)

(ஆ) மகத்தில் புக்கதோர் சனி

Makattil pukkator cani

(2) துன்பம் - distress

- 'மகத்தில் புக்கதோர் சனி எனக்கு

ஆனாய்' (சுந் தேவா.696: 1)

மகளிர் குழைகள் காதினின்றும்

சோர்தல் Makalir kulaikal katininrum

cortal (women's ear ornaments falling)

(1) தீமை, தோல்வி, கணவர் இறப்பு

- evil, defeat, death of husband

'படவரவு அல்குலார் காதில்

பையெனச் சுடர்தரு குழைகடாம்

அழிந்து சோர்ந்தவே' (சூளா.1221:

3-4)

மகன்றில் Makanril (a bird)

(1) பிரிவின்மை | அன்பு

Inseperable / love

'பூ இடைப்படினும் யாண்டு

கழிந்தன்ன நீர் உறை மகன்றிற்

புணர்ச்சி போலப் பிரிவு அரிது

ஆகிய தண்டாக் - காமமொடு'

(குறு.57: 1-3)


மஞ்சனம் ஆட்டல்


மங்கல கலசங்கள் கீழே விழுந்து

உடைதல் Mankala kalacankal kile viluntu

utaital (anspicious pots fall down and

break)

(1) தீமை, அழிவு, இறப்பு - evil,

destruction, death

'தெரியுமால் மங்கல கலசம்

சிந்தின' (கம்ப.சுந்.373:3)

மங்கையரின் மங்கலத் தாலிகள்

பிறரால் அறுக்கப் படாமல் தாமே

அறுந்து விழுதல் Mankaiyarin mankalat

talikal piraral arukkap patamal tamé aruntu

vilutal (anspicious marriage strings of

women snap off without anybody

cutting)

(1) தீமை, அழிவு, இறப்பு - evil,

destruction, death

'மங்கையர் மங்கலத் தாலி

மற்றையோர் அங்கையின்

வாங்குநர் எவரும் இன்றியே

கொங்கையின் வீழ்ந்தன குறித்த

ஆற்றினால்' (கம்ப.சுந்.376: 1-3)

மஞ்சள் Maical (turmeric)

(1) புனிதம் / மங்கலம் - sacred /

holy, anspicious

'சிறு பசுமஞ்சளொடு நறு விரை

தெளித்து' (திருமுரு.235)

(2) பாதுகாப்பு - protection / secure

சேம்பும் மஞ்சளும் - ஓம்பினர்

காப்போர்' (மலை.343)

(ஆ) மஞ்சள் பூசுதல் Manncal

pucutal (smearing turmeric)

(3) பெண்மை - feminity

'பற்று மஞ்சள் பூசிப்

பாவைமாரொடு பாடியில்'

(நாலா.235: 1)

மஞ்சனம் ஆட்டல் Mancanam attal

(bathe)

(1) திருமணம் - wedding

'குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம்

மட்டித்து மங்கல வீதி வலம்

செய்து மா மண நீர் அங்கு


228