பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரம்


‘கரி பொய்த்தான் கீழ் இருந்த

மரம் போலக் கவின் வாடி, எரி

பொத்தி, என் நெஞ்சம்

சுடும் ஆயின்'

(கலி.34: 10-11)

(ஈ) வேரொடு வெம்பிய மரம்

Verotu vempiya maram (tree dried from

the root)

(16) அழிவு, இறப்பு, இறுதி -

destruction, death, end

'யார்கண்ணும் இகந்து செய்து

இசை கெட்டான் இறுதிபோல்,

வேரொடு மரம் வெம்ப' (கலி.10: 3-

4)

(உ) வற்றல் மரம் Varral maram

(dry tree)

(17) தீமை, இறப்பு - bad omen, death

'பெரு மரத்து, இலை இல் நெடுங்

கோடு வற்றல் பற்றவும்' (புறம்.41:

5)

(18) அன்பின்மை - loveless -

'அன்பு அகத்து இல்லா உயிர்

வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல்மரம் தளிர்த்தற்று'

(குறள்.78)

(19) பயனின்மை - futile

'கூடிக் கூடி உன் அடியார்

குனிப்பார் சிரிப்பார் களிப்பாரோ

வாடி வாடி வழி அற்றேன் வற்றல்

மரம் போல் நிற்பேனோ'

(திருவா.32: 11.1-4)

(ஊ) முள் மரம் Mul maram (thorn

tree)

தீமை - evil, harm

'இளைதாக முள்மரம் கொல்க -

களையுநர் கை கொல்லும் காழ்த்த

இடத்து !' (குறள்.879)

(எ) நச்சு மரம் Naccu maram

(poisonous tree)

(20) பயனின்மை , தீமை - futile, vile

'நச்சப்படாதவன் செல்வம்

நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று'

(குறள். 1008)

(ஏ) காயா மரம் Kaya maram

(unfruitful tree)


மரம்


பயனின்மை - futile

'பூத்தாலும் காயா மரமுள

மூத்தாலும் நன்கறியார் தாமும்

நனியுளர் - பாத்தி விதைத்தாலும்

நாறாத வித்துள பேதைக்(கு)

உரைத்தாலும் தோன்றா துணர்வு'

(பழமொழி. 93)

(ஐ) இடையன் எறிந்த மரம்

Itayan erinta maram (tree cut by

shephard)

துன்பம் - affliction

'அடையப் பயின்றார்சொல்

ஆற்றுவராக் கேட்டால்

உடையதொன் றில்லாமை

யொட்டின் - படைபெற் றடைய

அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்

இடைய னெறிந்த மரம்'

(பழமொழி. 223)

(ஓ) தனிமரம் Tanl maram (lone

tree)

(21) வலியின்மை - strengthless

'எதிர்த்த பகையை இளைதாய

போழ்தே கதித்துக் களையின்

முதிராதே தீர்த்து நனிநயப்பச்

செய்தவர். நண்பெல்லாந் தீரத்

தனிமரம் காடாத லில்' -

(பழமொழி. 286)

(ஓ) நிழன்மரம் Nilanmaram (shade

tree)

(22) பயன், உதவி - use, help

'அழன்மண்டு போழ்தின்

அடைந்தவர்கட் கெல்லாம்

நிழன்மரம் போல் நேரொப்பத்

தாங்கிப் பழுமரம்போல் பல்லார்

பயன்றுய்ப்பத் தான் வருந்தி

வாழ்வதே நல்லாண் மகற்குக்

கடன்' (நாலடி.202)

(ஔ) காழ்த்த மரம் Kaltta maram

(strong tree)

(23) அசைவின்மை , உறுதி - unmoving,

firm

'வள்ளன்மை பூண்டான்கண்

செல்வமும் உள்ளத்து

உணர்வுடையான் ஓதிய நூலும் -

புணர்வின்கண் தக்க தறியும்

தலைமகனும் இம்மூவர்


234