பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்


மருதம் (பண்) Marutam (a melody)

(1) இன்பம் | இனிமை -pleasure/

sweetness

‘குரு மணி யானை இயல் தேர்ப்

பொருநன் திருமருத முந்துறை

முற்றம் குறுகி, தெரி, மருதம்

பாடுப' (பரி.தி.2:73) -

மருந்து Maruntu (medicine)

(1) நன்மை - good | advantage

'விருந்தின் தீம் நீர் மருந்தும்

ஆகும்' (நற்.53: 8) |

(2) பயன் – benefit / cure

'தோற்றம் அல்லது நோய்க்கு

மருந்தாகா வேற்றுப்

பெருந்தெய்வம் பலவுடன்

வாழ்த்தி ' (குறு.263: 3-4)

(3) இதம் - comfort / soothing

'மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர

நினக்கு மருந்து ஆகிய யான்'

(ஐங்.59: 2-3)

(4) சொல் - word

.. .. .. நினைந்த சொல்,

திருந்திய யாக்கையுள் மருத்துவன்

ஊட்டிய மருந்து போல், மருந்து

ஆகி' (கலி.17: 18-20)

(5) ஆக்கம் - restore / cure

'மருந்து அறைகோடலின்

கொடிதே, யாழ நின் அருந்தியோர்

நெஞ்சம் அழிந்து உக விடினே'

(கலி.129: 24-25)

(6) மாண்பு – honour / nobility

பொருந்தாப் பழியென்னும்

பொல்லாப் பிணிக்கு மருந்தாகி

நிற்பதாம் மாட்சி' (பழமொழி.40:

1-2)

(7) துன்பம் களைதல் - remove

distress / heal

'அல்லல் ஒருவர்க் கடைந்தக்கால்

மற்றவர்க்கு நல்ல கிளைகள்

எனப்படுவார் - நல்ல

வினைமரபின் மற்றதனை நீக்கும்

அதுவே மனைமர மாய மருந்து'

(பழமொழி. 350)

மருப்பு Maruppu (tusk)

(1) வளைவு - curved -


மலர் கையேந்தல்


'மருப்பராய் வளைந்தால் ஒக்கும்

வாள்மதி' (திருநா.தேவா.2047: 2)

(2) வெண்மை - white

'காறார் வெண்மருப்பா

கடவூர்த்திரு வீரட்டத்துள்

(சுந் தேவா .462: 3)

மலங்கு (விலாங்கு மீன்) Malanku (a

fish)

(1) கள்ளச்செயல், ஏமாற்றுதல் - guile,

deceit)

'பாம்பிற்கு ஒருதலை -- காட்டி

ஒருதலை தேம்படு தெண்கயத்து

மீன்காட்டும் - ஆங்கு மலங்கன்ன

செய்கை மகளிர்தோள் சேர்வார்

விலங்கன்ன வெள்ளறிவி னார்'

(நாலடி.375) -

மலர்கை மணி Malarkai mani (gem in

hand(palm))

(1) தெளிவு - clear

'வழுவல் இல் பொருள்களை

மலர்கையின் மணியென

முழுவதும் உணரும் எம்

முனைவரன் அறிவே'

(நீலகேசி.450: 3-4)

மலர் கையேந்தல் Malar kaiyental

(holding flower)

(1) அழகு, ஈர்ப்பு - beauty, entice /

attract

'வலைவாழ்நர் சேரி வலையுணங்கு

முன்றின் மலர் கையேந்தி

விலைமீன் உணங்கற் பொருட்டாக

வேண்டுருவம் கொண்டு வேறோர்'

(சிலப்.7.10)

(ஆ) ஞாழல் கையேந்தல் Nalal

kaiyental

(2) இன்ப வாழ்வு - love life

'நிணங்கொள் புலால்

உணங்கனின்று புள்ளோப்புதல்

தலைக்கீடாகக் கணங்கொள்

வண்டார்த்துலாம் கன்னிநறு

ஞாழல் கையிலேந்தி' (சிலப்.7.9)

(இ) நீலம் கையேந்தல் Nilam

kaiyental


236