பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்றத்துப் புன்னை

(ஒப்பு) Rain அதிர்ஷ்டம், அறிவு,

இரக்கம், இறைமைநிலை,

உண்மை , உலகப்பொருத்தம்,

தூய்மை , நடனம், நீர், புனிதம்,

வளமை, விவேகம், விளைவளம்,

வேளாண்மை, வாழ்க்கை.

மன்றத்துப் புன்னை Manrattup punnai (a

tree in an open yard)

(1) துன்பம், துயர் உறுதல்

affliction, suffers -

'மன்றத்துப் புன்னைப் போல

மரம்படு துயரம் எய்தி'

(திருநா.தேவா.109: 1-2)

மனு Manu

(1) அறம் - ethical code

'மானம் நேர்ந்து அறம் நோக்கி

மனுநெறி போன தண் குடை

வேந்தன் புகழ் என' (கம்ப.பால.17:

1-2)

மா Ma (mango)

(1) தலைவி - heroine

'உறு வளி தூக்கும் உயர் சினை

மாவின் நறு வடி ஆர் இற்றவை

போல் அழிய' (கலி.84: 1-2)

(2) நன்னன் - a king

'... ... ... .. நன்னன் நறுமா கொன்று

நாட்டிற் போக்கிய' (குறு.13: 2-3)

(ஆ) மாங்கனி Maikani (mango

fruit)

(3) இனிமை - sweetness

'நன்மதுர மாங்கனியில்

இருந்ததனை நறுங்கூந்தல்'

(பெரிய, 1744: 5-6)

மாடலன் Matalan (a Brahmin)

(1) அறிவு - knowledge

'நான்மறை முற்றிய நலம்புரி

கொள்கை மாமறை முதல்வன்

மாடலன் என்போன் .. .. .. நாவல்

அந்தணன்' (சிலப். 15: 12-13, 20)

மாணை Manai (a creeper)

(1) குறிஞ்சித்திணை - mountanous tract


மாநிதிக்கிழவன்


'துறுகல் அயலது மாணை

மாக்கொடி துஞ்சுகளிறு இவரும்

குன்றநாடன்' (குறு.36: 1-2)

மாதிரம் எரிதல் Matiram erital (burning

sky)

(1) தீமை, தோல்வி - bad omen, failure

| defeat

.. எரிந்த மாதிரம்'

(சூளா.1220: 2)

மாதுளம் பீசம் Matulam picam

(pamegranate seed)

(1) சிவப்பு நிறம், வினைப்பயன் -

red, effect of actions

'மாதுளம் பீசம் உண்மான்

அரக்கின் நிறம் போதுளங்

காண்பது போல மற்றென்றான்'

(நீலகேசி.576: 3-4)

(2) உள்ளீடு - core

'அங்குரம் தன்கண்ணும் செல்லாது

அரக்கொடு மங்கின பீசத்து

உருவம் மலரின்கண் தங்கின

என்னும்சொல் தத்துவமாக்

கொண்ட அங்குலி மாரனை

ஆதன்மற்று என்னாய்'

(நீலகேசி.583)

மாநிதிக்கிழவன் Manitikkilavan (kubera)

(1) தலைவன் / வளம் - hero /

richness

'மாநிதிக் கிழவனும் போன்ம் என,

மகனொடு தானே புகுதந்தோனே!'

(அகம்.66: 17-18)

(ஆ) வாணன் Vanan

(2) செல்வம் - wealth

'தென்புல மருங்கின் விண்டு

நிறைய வாணன் வைத்த விழுநிதி

பெறினும் பழிநமக்கு எழுக

என்னாய்'

(மது.202-204)

(இ) நிதிக்கோன் Nitikkon

செல்வம் - wealth

பயிலும் உருப் பல கொண்டு

நிதிக்கோன் தங்கப் பயில்

அளகாபுரி வகுத்த பரிசு காட்டும்'

(பெரிய. 1:9. 101)


242