பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மான்


'கற்றவர் மானம் நோக்கின் கவரிமா

அனைய நீரார்' (கம்ப.அயோ.6: 4)

(எ) கங்கையில் அகப்பட்ட பிணை

Kankaiyil akappatta pinai (doe in

Ganges)

(11) வருத்தம், துன்பம் - suffering,

affliction

'கங்கையின் சுழியிற் பட்ட காமரு

பிணையின் மாழ்கி' (சீவக. 1096:

1)

(ஏ) கவரி Kavari

மானம் - honour

‘மானமாக் கவரி வெண் மயிரின்

வேய்ந்தன' (சீவக. 1201: 2)

(ஐ) புலி நிழற்பட்ட மான் Puli

nilapatta man (deer shadowed by

tiger)

துன்பம் - affliction -

'புலிநிழற் பட்ட மான்போல்

போகுயிர் ஆகி நின்றார்'

(சீவக.2946: 4)

(ஓ) அடுபுலி கண்ட மான்

Atupuli kanta man (deer seeing a killer

tiger)

(28) அச்சம் - fear

'அடுபுலி கண்ட மான்போல் ஆறல

வாயினாரே' (சீவக. 1137; 4)

(ஓ) மா (கவரிமா) Ma

(29) மானம், மாட்சி - honour,

nobleness

'வருந்தல் இல் மானம் மா அனைய

மாட்சியர்' (கம்ப.சுந்.506: 1)

(ஔ) வலையிடைப்பட்ட மான்

Valaiyitaippatta man (deer in net)

(30) துயர் | துன்பம் - suffer,

affliction

‘வலையிடைப் பட்ட மானே

போன்றாங்கு அஞ்சி நின்றழைக்கு

மாத்துயர் கண்டு ' (மணி.13:32-33)

(ஒப்பு) Deer அழகு, அன்பு,

ஆன்மா, இலையுதிர்காலம், உயர்வு,

இளமை மீட்புப்பேறு, கன்னிமை,


மின்னல் இன்றி வானம் இடித்தல்


கடவுட்பற்று, கிறித்து, செயலறிவு,

தற்கட்டுப்பாடு, தன்னடக்கம்,

தனிமை, தாய்மைப்பாசம்,

துல்லியமான செவிப்புல அறிவு,

தூய்மை , தூய ஆன்மா ,

தேடிச்செல்லும் அறிவாற்றல்,

நிலைபேறு, நீண்ட வாழ்நாள்,

நேர்த்தி, மென்மை, வளமை,

விரைவியக்கம்; அறியாமை,

கோழைத்தனம், நிலையாமை,

பாலியல் ஆர்வமுனைப்பு.

மான்மதம் (கத்தூரி) Maxmatam (musk)

(1) நறுமணம் - fragrance

'மான்மதச் சாந்த மணம்கமழ்

தெய்வ' (சிலப்.13: 117)

மிதுனம் Mitunam

(1) அறிவாற்றல் - wisdom

'.. .. .. .. பொருள் தெரி புந்தி

மிதுனம் பொருந்த' (பரி. 11: 5-6)

(2) கார் - rainy season

பொதியில் முனிவன் புரை

வரைக் கீறி மிதுனம் அடைய'

(பரி.11:11-12)

(ஒப்பு) Gemini அறிவாற்றல்,

ஆரஞ்சு நிறம், இருமை, உடல்,

காதலர். காற்று, தொடர்பாற்றல்,

புதன்கோள், மாறும் இயல்பு,

வெப்பம், வேறுபடுத்தல்.

மின்மினி Minmini (fire fly)

(1) ஒளி - glow

'பல் மர உயர் சினை மின்மினி

விளக்கத்து' (நற்.44: 10)

(2) மிகுதி - abundance

'நிலம் படு மின்மினி போல, பல

உடன் இலங்கு பரல் இமைக்கும்'

(அகம்.67: 16-17)

(3) விளக்கம் - bright

'மின்மினி மொய்த்த முரவு வாய்ப்

புற்றம்' (அகம்.72:3)

மின்னல் இன்றி வானம் இடித்தல்

Minnal inri vanam itittal (thunder

without lightening)


245