பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகராதியின் அமைப்பு

தமிழிலக்கியங்களை (கி.பி.12-ஆம்நூ.வரை) அடிப்படையாக்கித் திரட்டப்பட்ட குறியீடுகள் இங்கு அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. முதல் வருகையின் அடிப்படையில் தலைப்புச் சொல் தேர்ந்து கொள்ளப் பட்டுள்ளது. குறியீடாக அமையும் தலைப்புச் சொல்,ஒலிபெயர்ப்பு,ஆங்கில இணைச்சொல் / விளக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.அரிய சொல்லாயின் தமிழில் பொருள் (அடைப்புக் குறியுள்) தரப்பட்டுள்ளது. குறியீட்டுப் பொருண்மைகள், கால அடிப்படையில் நிரல்படுத்தப்பட்டு, எண்ணிட்டு சான்றுடன் அமைக்கப்பட்டுள்ளன. தலைப்புச் சொல்லோடு ஒத்த பொருளுடைய சொல்,தொடர், தொடர்புடைய வெளியீடு என்பன, தொடர்ந்து (தமிழெழுத்துகளால் குறிக்கப் பெற்றுத்)தரப்பட்டுள்ளன. குறியீட்டகராதிகள் வழி பெறப்பட்ட ஒப்பு நோக்குதற்கான பொருண்மைகள் வாய்ப்புகேற்ப இறுதியில் தரப்படுகின்றன.

இணைப்பு

அகர வரிசையில் அமையாத துணைத் தலைப்புச் சொற்களின் பட்டியல் (அடைப்புக் குறிக்குள் தலைப்புச் சொல்லுடன்) இணைப்பாகத் தரப்பெற்றுள்ளன.