பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வயல்


வயல் Vayal (field)

(1) செல்வம் - wealth

'திரு நயத்தக்க வயல்'

(பரி.தனிப்.1: 17)

(ஒப்பு) Field. சுதந்திரம்,

நிகழ்வுக்குரிய நிலை, படைப்பு,

பரந்த தன்மை , வளமை.

வயலை Vayalai (a creeper)

(1) தலைவி - heroine -

'புயல் புறம் தந்த புனிற்று வளர்

பைங் காய் வயலைச் செங் கொடி

களவன் அறுக்கும்' (ஐங்.25: 1-2)

வயவன் (மரங்கொத்தி) Vayavan (wood

pecker)

(1) கூர்மை - sharp

'குடுமி நெற்றிக் கூருளி அன்ன

வல்வாய் வயவன்' (பெருங் உஞ்.55:

20-21)

(ஆ) வயவன் வற்றிய

மரத்திலிருந்து ஒலித்தல் Vayavan

varriya marattiliruntu olittal (wood

pecker twittering from dry tree)

(2) தீமை, போர், படை வரவு - evil

omen, forewelling war

'வரு படைக்கு அகன்ற வயந்தகன்

வருவழிப் பொருபடை அண்னல்

பொழில்வயின் இருப்பக்

கடுவிசைக் கனலி சுடுகதிர்

மருங்கில் குடுமி நெற்றிக் கூர் உளி

அன்ன வல்வாய் வயவன்

வறண்மரத்து உச்சிப் பல்கால்

உரைத்தது பகற்படை தருமெனப்

பாட்டில் கூறக் கேட்டனன் ஆகி'

(பெருங். உஞ்.55: 17-23) -

வயிர் (கொம்பு) Vayir (bugle / trumpet)

(1) தெளிவு - clear

'வயிர் இடைப்பட்ட தெள் விளி

இயம்ப' (அகம்.269: 18)

(2) இனிமை - sweet

‘வயிர் எழுந்து இசைப்ப

(திருமுரு.120)


வராஅல்


வயிரம் Vayiram (diamond)

(1) உறுதி - firm

வயிரத்தன்ன வை ஏந்து

மருப்பின்' (அகம்.178: 1)

(2) திண்மை

'கல் படி வயிரத் திண்கால்

நகங்களின் கல்லி கையால்'

(கம்ப.யுத்.788: 3)

(ஒப்பு) Diamond அறிவுத்திறம்,

ஆற்றல், உண்மை , ஒழுக்கம்,

ஒளி, கடினத்தன்மை , காதல்,

செல்வச்செழிப்பு, தன்னடக்கம்,

தூய்மை, நிலைபேறு, பளபளப்பு,

மகிழ்ச்சி, முழுமை, வலிமை,

வாழ்க்கை , விலைமதிப்பு,

வெளிப்பாடு, வெற்றி.

வராஅல் Varaal (a fish)

(1) வளம் - fertile

'வலை வல் பாண்மகள் வால்

எயிற்று மடமகள் வராஅல்

சொரிந்த வட்டியுள், மனையோள்

யாண்டு கழி வெண்ணெல்

நிரைக்கும் ஊர' (ஐங்.48: 1-3)

(2) தலைவன் - hero

'பகுவாய் வராஅல் பல் வரி இரும்

போத்துக் கொடுவாய் இரும்பின்

கோள் இரை துற்றி, ஆம்பல்

மெல் அடை கிழிய, குவளைக்

கூம்பு விடு பல் மலர் சிதையப்

பாய்ந்து , எழுந்து ' (அகம்.36: 1-4)

(3) பரத்தையர் - prostitute

'உண்டுறைப் பொய்கை வராஅல்

இனம் இரியும் தண்டுறை ஊர!

தகுவதோ - ஒண்தொடியைப்

பாராய் மனை துறந் தச்சேரிச்

செல்வதனை ஊராண்மை ஆக்கிக்

கொளல்' (ஐந்.எழு.52)

(ஆ) வரால் Varal

(4) பெரிய அளவு - huge

'சிறிய பொருள் கொடுத்துச் செய்த

வினையால் பெரிய பொருள்கருது

வாரே - விரிபூ விராஅம் புனலூர

வேண்டயிரை விட்டு வராஅஅல்

வாங்கு பவர்' (பழமொழி, 372)

260