பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய்க்கால்


'அலர் வாய்ப் பெண்டிர்

அம்பலொடு ஒன்றி' (நற்.36: 6)

(ஒப்பு) Mouth ஆக்கல், இருமை,

உண்ணுதல், சுவாசித்தல்,

சொல்லாற்றல்; அழித்தல்,

வாய்க்கால் Vaykkal (canal / channel)

(1) நட்பு - friendship

'சேய்த்தானும் சென்று கொளல்

வேண்டும், செய்விளைக்கும்

வாய்க்கால் அனையார்

தொடர்பு. (நாலடி.218:3-4)

வாயில் Vayil (door/ gate)

(1) பாதுகாப்பு - secure, protect

'காப்புடை வாயில் போற்று, ஓ

என்னும்' (நற்.132: 8)

(2) தடை | தடுப்பு - obstruct /

prevent

'பலர் புகு வாயில் அடைப்பக்

கடவுநர்' (குறு.118: 3)

(3) புகுதல் / வழி - enter/ way

'உலகு புகத் திறந்த வாயில்'

(புறம்.234: 5)

(4) திறப்பு | விருந்தோம்பல் - open

/ entertain guests

'அடையா வாயில் அவன் அருங்

கடை குறுகி' (சிறுபா,206)

(5) ஐம்பொறிகள் - five senses

'பொறி வாயில் ஐந்து அவித்தான்'

(குறள்.6)

(ஆ) இஞ்சி Inci

பாதுகாப்பு, தடை | தடுப்பு -

safe / obstacle

'இஞ்சி அடுத்துவைத் தேமாந்

திருப்பினும்' (பழமொழி.320: 1)

(ஒப்பு) Gate, Door, Entrance

அரணமைத்தல், அருளிரக்கம்,

ஆற்றல், உடல், கருவாய்,

சுதந்திரம், செல்லும் வழி,

தொடக்கம், நிலைமாற்றம், நீதி,

நேர்மை, நுழைவிடம், பாதுகாப்பு,

புகழ், பெண்மை , போர்,

மறுபிறப்பு, முடிவு.


வாழை


திறந்திருக்கும் வாயில்

அமைதி, பகற்பொழுது,

விருந்தோம்பும் பண்பு.

மூடியிருக்கும் வாயில் .

அவலநிலை, போர்,

விருந்தோம்பாமை, வெளியே

துரத்துதல்.

இருண்ட வாயில் - இறப்பு,

கீழுலகம்.

இரும்பு வாயில் - வாழ்வு.

வாயும் பல்லும் உலர்தல் Vayum

pallum ulartal ( dryness of mouth and

teeth)

(1) தீமை - evil

'வாயினும் பல்லினும் உலறினார்

.. .. ..' (கம்ப .யுத்.107: 1-2)

வாலியோன் (பலதேவன்) Valiyon (the

white (Baladeva))

(1) வலிமை - strength

'வலியொத் தீயே வாலி யோனை'

(புறம்.56: 12)

வாழை Valai (plantain)

(1) தலைவி - heroine

'நெடுநீர் அருவிய கடும் பாட்டு

ஆங்கண், பிணி முதல் அரைய

பெருங் கல் வாழைக் கொழு முதல்

ஆய் கனி மந்தி கவரும்'

(நற்.251: 1-3)

(2) வளமை - fertile

சோலை வாழை முனைஇ,

அயலது' (நற்.232: 3)

(3) ஒருமை - once / onetime

'முன்னும் ஒருகால் பிழைப்பானை

ஆற்றவும் பின்னும் பிழைப்பப்

பொறுப்பவோ? இன்னிசை

யாழின்வண்(டு) ஆர்க்கும்

புனலூர! ஈனுமோ வாழை

இருகால் குலை' (பழமொழி. 63)

(4) இனிமை, நன்மை - sweetness,

goodness

வேம்பின் இலையுட் கனியினும்

வாழைதன் தீஞ்சுவை யாதுந்

திரியாதாம்' (நாலடி.244:1-2) -

(5) இன்பம் - happy

264