பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விலங்கு


'வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை

அஞ்சாது' (நற். 148: 6)

கொடுமை - cruel

'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ்

சிலை மறவர்' (குறு.297: 1)

(10) அழகு | ஒலி - beauty / sound

'அரி மான் இடித்தன்ன, அம் சிலை

வல் வில்' (கலி.15: 1)

வலிமை - strong

'வரி மாண் நோன் ஞாண் வன்

சிலைக் கொளீஇ' (அகம்.61: 7)

(11) ஆற்றல் - power

'அரவு உறழ் அம் சிலைக் கொளி இ'

(குறி.158)

(இ) சாபம் Capam

(12) மாண்பு / மாட்சி - noble / honour

'மாண் வினைச் சாபம் மார்புற

வாங்கி' (பதி.90: 32)

அழகு - beauty

'கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து'

(புறம்.7: 4)

(ஈ) வில் வணக்கம் Vil vanakkam

(bow bent)

(13) தீமை - evil)

'சொல் வணக்கம் ஒன்னார்கண்

கொள்ளற்க வில் வணக்கம் தீங்கு

குறித்தமையான்' (குறள்.827)

(உ) வில் நாண் அறுபட்டு

இற்றுப்போதல் Vil nan arupattu

irruppotal (torn bow string)

(14) தீமை, இறப்பு, அழிவு - evil

omen

'ஏவும் வெஞ்சிலை நாண் இடை

இற்றன' (கம்ப.யுத்.3663: 2)

(ஒப்பு) Bow அறிவாற்றல், ஆற்றல்,

உயிர்ப்பாற்றல், நா, நெருப்பு,

மின்னல், வலிமை, வளமை, விதி,

வேட்டையாடுதல்; இறப்பு, போர்.

விலங்கு Vilanku (animal)

(1) கல்லாமை - illiterate / uneducated /

unrefined

‘விலங்கொடு மக்கள் அனையர் - -

இலங்கு நூல் கற்றாரொடு

ஏனையவர்' (குறள்.410)


விழவு


(2) சினம் / சீற்றம் - anger / wrath

'வென்றிப் பொருட்டால்

விலங்கொத்து மெய்கொள்ளார்

கன்றிக் கறுத்தெழுந்து காய்வரோடு

ஒன்றி உரைவித்து அகமெழுவார்

காண்பவே, கையுள் சுரைவித்துப்

போலுந்தம் பல்' (நாலடி. 315)

(3) அறியாமை | பகுத்தறிவின்மை -

ignorance / irrational

'பாம்பிற்கு - ஒருதலை காட்டி

ஒருதலை தேம்படு தெண்கயத்து

மீன்காட்டும் ஆங்கு மலங்கன்ன

செய்கை மகளிர்தோள் சேர்வார்

விலங்கன்ன வெள்ளறிவினார்'

(நாலடி. 375)

விழவு Vilavu (festival)

(1) மேன்மை - glory

‘விழவுமேம் பட்டவென் நலனே

(குறு.125: 4)

(2) மகிழ்ச்சி - glad / happy

'பெருநிலக் குறுமகள் வந்தென எ

இனிவிழ வாயிற்று என்னும் இவ்

ஊரே ' (குறு.295: 5-6)

(3) பாதுகாப்பு - security

'ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின்'

(பதி.15: 38)

(4) அழகு - beauty

'கல்லெனக் கவின் பெற்ற விழவு

ஆற்றுப்படுத்த பின்' (கலி.5: 10)

(5) மாட்சி - honourable

'நல் மாண் விழவில் தகரம்

மண்ணி ' (அகம்.385:6)

(6) வெளிப்படை - open, reveal

'உள்ளி விழவின் அன்ன, அலர்

ஆகின்று, அது பலர் வாய்ப்

பட்டே ?' (அகம்.368: 18-19)

(7) மங்கலம், களிப்பு - auspicious,

happy

'மங்கல விழவு கொண்டு வருந்தித்

துறை நீராடி பொங்கிய

களிப்பினோடும்' (பெரிய,562: 1-3)

(ஆ) திருவிழா Tiruvila

(8) சிறப்பு - eminent

'மிக்க சீர்வளர் திருவிழா

விருப்புடன் வணங்கி'

(பெரிய 7.4)


270