பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழுப்புண்


விழுப்புண் Viluppun (wound)

(1) வீரம் - valour

'அழுந்து படு விழுப் புண் வழும்பு

வாய் புலரா எவ்வ நெஞ்சத்து

எஃகு எறிந்தாங்கு' (நற்.97: 1-2)

(ஆ) புகழ்குறி Pukalkuri

(2) பெருமை, புகழ்ச்சி - pride, fame

‘புகழ்குறி கொண்ட பொலந்தார்

அகலத்து ' (அகம்.354: 9)

விழிக்கும் அளவு Vilikkum alavu

(wink)

(1) காலச் சிறுமை - momentary

'விழிக்கும் அளவிலே வேர்

அறுத்தானை' (நாலா. 167:3)

விளக்கு Vilakku (lamp)

(1) அறம் - virtue

'வேலின் நோக்கிய விளக்கு

நிலையும்' (தொல்.1036)

(2) பெண் - woman

'மனைக்கு விளக்கு ஆயினள்மன்ற'

(ஐங்.405: 2)

(3) ஒளி - glow, light

'கைவிளக்காகக் கதிர் சில தாராய்'

(கலி.142: 43)

(4) புகழ், சிறப்பு, கற்பு,

கடவுட்டன்மை - fame, eminence,

chastity, divine

'கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு

ஆகிய புதல்வற் பயந்த புகழ் மிகு

சிறப்பின்' (அகம்.184: 1-2)

(5) வழிபாடு - worship

'இரும்செய் விளக்கின் ஈர்ந்திரிக்

கொளீஇ நெல்லும் மலரும் தூஉயக்

கைதொழுது' (நெடுநல்.42-43)

(6) பொய்யாமை - truth

‘எல்லா விளக்கும் விளக்கல்ல

சான்றோர்க்குப் பொய்யா

விளக்கே விளக்கு' (குறள்.299)

(7) கல்வி ஞானம், அறிவு

knowledge, wisdom

'விளக்கு விலைகொடுத்துக் கோடல்

விளக்குத் துளக்கம் இன்(று)

என்றனைத்தும் தூக்கி விளக்கு

மருள்படுவ தாயின் மலைநாட

என்னை பொருள் கொடுத்துக்

கொள்ளார் இருள்' (பழமொழி. 3)


விளக்கு


(8) ஒளி, நன்மை , நல்வினை - light,

goodness, good deed

'விளக்குப் புக இருள் மாய்ந்தாங்

கொருவன் தவத்தின் முன்

நில்லாதாம் பாவம் - விளக்குநெய்

தேய்விடத்துச் சென்றிருள்

பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து

நிற்குமாம் தீது' (நாலடி.51)

(9) தூய்மை - purity

'தூய திரு விளக்கெரித்தார்

துளக்கறு மெய்த்தொண்டனார்'

(பெரிய 4064: 7-8)

(ஆ) விளக்கு அணைதல் Vilakku

anaital (light put off)

(10) தீமை , இறப்பு - evil, death

நெடுநகர் வரைப்பின் விளக்கும்

நில்லா ' (புறம்.280: 3)

(இ) விளக்கம் Vilakkam

ஒளி - light

பல் மர உயர்சினை மின்மினி

விளக்கத்து' (நற்.44: 10)

புகழ் - fame

'புகழ்செய்யும் பொய்யா விளக்கம்'

(நான்.24: 1)

(ஈ) விளக்கொளி Vilakkoli (lamp

light)

(11) நிலையற்ற அன்பு - transient love

| false love

'விளக்கொளியும் வேசையர் நட்பும்

இரண்டும் துளக்கற நாடின்

வேறல்ல விளக்கொளியும்

நெய்யற்ற கண்ணே அறுமே,

அவரன்பும் கையற்ற கண்ணே

அறும்' (நாலடி. 371)

(உ) கைவிளக்கு Kaivilakku (small

lamp)

(12) தெளிவு - clarity

'மாட்சி ஒன்றானும் இன்றி

மயங்கினேற் கிருளை நீங்கக்

காட்டினார் தேவர் ஆவர்

கைவிளக்கதனை என்று '

(சீவக. 2729: 2-3)

(ஊ) தீபம் Tipam

271