பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெண்மதி இழந்த மீன்


'வெண்ணெய் தீயுற்ற வண்ணம்

ஆடவர் மெலிகின்றாரே' (சீவக.5:

1255.4)

(ஈ) இழுது Ilutu

(6) மென்மை - smooth

'இன்புகை ஆர்ந்த இழுதார்

மென்பள்ளி மேல்' (சீவக.1576: 1)

(உ) தீயுறு வெண்ணெய் Tiyuru

venney

(7) உருகுதல், நிலையழிதல் - melt,

change)

'தீயுறு வெண்ணெயின் உருகு

நெஞ்சமொடு' (பெருங். உஞ்.33: 153)

(ஊ) நெருப்புறு வெண்ணெய்

Neruppuru venney

நிலையாமை, அழிவு, உருக்கம் -

transient, destruction, melting

நெருப்புறு வெண்ணெயும் நீருறும்

உப்பும் எனவிங்ஙனே பொருப்புறு

தோகை புலம்புறல் பொய்யன்பர்

போக்குமிக்க' (திருக்கோ .22: 315, 1-

2)

(எ) வெண்ணெய் உருகாதிருத்தல்

Venney urukatiruttal (butter not

melting)

(8) தீமை - evil omen

'உறிநறு வெண்ணெய் உருகா

உருகும்' (சிலப். 17:3.1)

(ஏ) வெண்ணெய்க் குன்று

எரியுறல் Venneyk kunru eriyural

(butter mount on fire)

உருகுதல், மெலிதல் - melt,

leanness

'வெண்ணெய்க் குன்று எரியுற்றாற்

போல் மெலிந்துபின் நிற்குமன்றே'

(சீவக.1597: 4)|

வெண்மதி இழந்த மீன் Venmati ilanta

min (star, without moon)

(1) மயக்கம் (அறிவு மயக்கம்) -

confusion/ bewilderment


வெண்மை


'வெண்மதி இழந்த மீன்போல்

விடலைக்குத் தம்பி மாழாந்து'

(சீவக.1695: 1)

வெண்மை Venmai (white)

(1) பொய்ம்மை - false / untruth

'.. .. .. .. வாய் அல்லா வெண்மை

உரையாது' (கலி.88: 6)

(2) புல்லறிவு | அறிவு முதிராமை -

- ignorance / immetured

'வெண்மை எனப்படுவது யாது

எனின் ஒண்மை உடையம் யாம்!

என்னும் செருக்கு' (குறள்,844)

(3) தூய்மை - pure

'வெண் குணங்கொள் கோவணம்

தண்டினில் அவிழ்த்தது

கொடுப்பார்' (பெரிய.514: 6-8))

(4) அந்தணர் - Brahmin

'வெண் துகில் உடுத்து வெண்

சாந்து மெய் வழித்து ஒண் திரள்

மல்லிகை ஒலியல் சூடினார்

வண்திரள் மணிமுத்தும் வயிரச்

சாதியும் கொண்டியல் அணியொடு

கோலம் தாங்கினார்' (சூளா.1874)

(ஆ) வெள்ளை Vellai

(5) பழியின்மை - blemishless

'பால்நிற வண்ணன் போல்பழி

தீர்ந்த வெள்ளையும்' (கலி.104: 8)

(6) பேதைமை - innocence

'கள்ளம் இன்றிக் கட்டாள் வீழ்த்த

வெள்ளை வேட்டுவீர் புள்ளெவன்

பிழைத்ததென்று உள்

அழிந்தவர்கட்கு உறுதி கூற'

(பெருங் உஞ்.56: 15-17)

(7) பிள்ளைத் தன்மை – childlike

'பிள்ளைமை கலந்த பேதைப்

பெரும்பிணை வெள்ளை

நோக்கமொடு விரும்புபு விதும்பி'

(பெருங். இலா. 15: 99-100)

(8) வஞ்சகமின்மை - guileless

'வெந்த னம்ம னம்மென

வெள்ளை நோக்கின்

முள்ளெயிற்று' (சீவக. 1099: 1)

(இ) வெளிறு Veliru

(9) அறியாமை - ignorance

'அரிய கற்று ஆசு அற்றார்கண்ணும்

தெரியுங்கால் இன்மை அரிதே

வெளிறு' (குறள்.503)


274