பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெந்த புணில் வேல் நுழைதல்


(10) வெளிப்படை - open / exposed

'வெளிறு பட விளையாடிய

விகிர்தன் இராவணனை'

(திருஞான தேவா.3251: 5-6)

(ஒப்பு) White Colour அகிம்சை ,

அமைதி, அருளிரக்கம்,

அறிவொளி, ஆன்மா, இறைமை,

உண்மை , எளிமை, கற்பு,

கன்னிமை, தற்காலப் போர்நிறுத்தம்,

தன்னடக்கம், தூய்மை ,

நடுநிலைமை, பகல்பொழுது,

புனிதத்தன்மை, மறுபிறப்பு,

முழுமை, மேன்மை, மீட்பு,

வாழ்க்கை , வியப்பார்வம்,

விழிப்புநிலை, வீறு, வெளிப்பாடு;

அறியாமை, இறப்பு, துயரம்,

முதுமை.

வெந்த புணில் வேல் நுழைதல்_Venta

Punnil vel nulaital (spear in wound)

(1) துன்பம் - affliction

'வெந்த கொடும் புணில் வேல்

நுழைந்தது ஒப்ப சிந்தை திரிந்து

திகைத்து அயர்ந்து வீழ்ந்தான்'

(கம்ப.அயோ .201:2-3)

(ஆ) வெந்தீ புண் மேல்

நுழைதல் Venti pun mel nulaital (fire

in wound)

துன்பம் - affliction

'விண்மேல் எழுந்தான் எழு

மெல்லியலாளும் வெந்தீ

புண்மேல் நுழையத்

துடிக்கின்றனள் போல் புரண்டாள்'

(கம்ப. ஆரண்.922: 3-4)

வெந்நீர் Vennir (hot water)

(1) காமம் - passion

'நோய் உறு வெந் நீர்; தெளிப்பின்,

தலைக் கொண்டு வேவது அளித்து

இவ் உலகு' (கலி.142: 53-54)

வெய்ய தேன் வாய்க்கொள்ளுதல்

Veyya ten vaykkollutal (hot honey in

mouth)

(1) தடுமாற்றம் - totter/ perplexed


வெள்ளம்


'வெய்ய தேன் வாய்க்கொண்டாற்

போல் விழுங்கலோடு உமிழ்தல்

தேற்றான் செய்வதென்

நோற்றிலாதேன் நோற்றிலாள்

திறத்தின் என்று மையல்

கொண்டிருப்ப அப்பால் குமரிதன்

மதியில் சூழ்ந்தாள்' (சீவக.2072: 3-

8)

வெயிலிடைத் தந்த விளக்கு Veyilitait

tanta vilakku (lamp in sunlight)

(1) ஒளியின்மை - dull / not bright

வெயிலிடைத் தந்த விளக்கு என

ஒளி இலா மெய்யாள்'

(கம்ப.சுந்.332: 2)

வெவ்விடம் தலைக்கொண்டல்

Vevvitam talaikkontal (poison rising to

head)

(1) கடுந்துயரம் / வேதனை - distress

| pain

'அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு

துயரம் எய்தி வெவ்விடம்

தலைக்கொண்டாற் போல்

வேதனை அகத்து மிக்கு'

(பெரிய. 117: 1-4)

வெள்ளம் Vellam (flood)

(1) அழிவு - destruction

'அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே'

(நற்.177: 10)

(2) மிகுதி, துன்பம் - immence /

abundance, sorrow

'உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி'

(குறு.29: 3)

(3) பேரளவு - large/exceed

'கங்குல் வெள்ளம் கடலினும்

பெரிதே' (குறு.387: 5)

(4) வரம்பின்மை - linitless

'புலம் கெட நெறிதரும் வரம்பு இல்

வெள்ளம்' (பதி.33: 6)

(5) காமம் - passion

'.. ... ... மிகு பெயல் உப்புச் சிறை

நில்லா வெள்ளம் போல, நாணு

வரை நில்லாக் காமம் நண்ணி'

(அகம்.208: 19-20)

(6) வளம் - abundance / fertile

வெள்ளம் மாறாது விளையுள்

பெருக' (மது.109)

275