பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலி


தோன்றும் - முருகா! - என்று

ஓதுவார் முன்' (திருமுரு.தனிப்.6)

(11) வெம்மை - severity

'தேரோர்க்கு அழன்ற வேலினை

எனவும், .. .. .. .. தெவ்வர்க்கு

ஓக்கிய' (சிறுபா.234)

(12) நிலைபேறு - stability

'நீர் ஒலித்தன்ன நிலவு வேற்

தானையொடு' (மது.369)

(13) சினம், நன்மை – wrath, upright

'மனைக்காக்கம் மாண்ட மகளிர்

ஒருவன் வினைக்கு ஆக்கம்

செவ்வியன் ஆதல் - சினச்

செவ்வேல் நாட்டாக்கம் நல்லனிவ்

வேந்தென்றல் கேட்டாக்கம் கேளிர்

ஒரீஇ விடல். (நான்.20)

(ஆ) உடம்பிடி Utampiti

வீரம் - valour

'கடம்பு அமர் நெடுவேள் அன்ன,

மீளி, உடம்பிடித் தடக்கை ஓடா

வம்பலர்' (பெரும்.75-76)

(இ) எஃகம் Ekam

(14) மாட்சி, மாண்பு - noble,

honourable -

'ஓங்குதிரைப் பௌவம் நீங்க

ஓட்டிய நீமாண் எஃகம் நிறத்துச்

சென்று அழுந்த' (அகம்.212: 19-20)

திறல், கூர்மை - strong, sharp

'உள்ளம் அழிக்கும் கொட்பின்

மான்மேல் எள்ளுநர்ச் செகுக்கும்.

காளை கூர்த்த வெந்திறல் எஃகம்

நெஞ்சுவடு விளைப்ப' (புறம்.303:

2-4)

(ஈ) வேல் கூர்மை மழுங்குதல்

Vel kurmai malunkutal (spear

becoming blunt)

(15) தீமை, தோல்வி - evil, defeat

'.. .. .. .. நாம வென்றிவேல்

பூவொளி மழுங்கின ... ... ... ..'

(சூளா .1222: 2-3)

வேலி Veli (fence)

(1) பாதுகாப்பு - protection

'ஒலி காவோலை முள் மிடை

வேலி' (நற்.38: 8) -

(2) தடை - obstruction / obstacle


வேள்வி


'இடு முள் நெடு வேலி போல'

(கலி.12: 1)

(3) தகவு / பெருமை - worthiness /

greatness |

'தகவு எனும் வேலி இட்டு'

(திருநா.தேவா.2921: 6)

(4) காவல் - guard / protect

'நாலு வேதம் ஆம் நவை இல்

ஆர்கலி வேலி அன்னவன்

மலையின் மேல் உளான்'

(கம்ப.கிட்.114: 1-2)

(ஆ) சிறை Cirai

பாதுகாப்பு, காவல் - protection,

security

'சிறை இல் கரும்பினைக் காத்து

ஓம்பல் இன்னா ' (இன்னா .5)

(ஒப்பு) Hedge, Fence இரகசியம்,

தனிமை

வேலூர் Velur (a town)

(1) வெற்றி - victory

'திறல்வெல் நுதியில் பூத்தகேணி

விறல்வேல் வென்றி வேலூர்'

(சிறுபா.172-173)

வேழமுண்ட வெள்ளில் Velamunta vellil

(a diseased fruit)

(1) உள்ளீடின்மை, உள்ளுறுதியின்மை

- hollow, careless

'வெஞ்சின வேழமுண்ட

வெள்ளிலின் வெறியமாக

நெஞ்சமு நிறையு நீல

நெடுங்கணாற் கவர்ந்த கள்வி'

(சீவக.1024: 1-2)

(ஆ) வேழமுண்ட விளங்கனி

Velamunta vilaikani

(2) வீண், பயனின்மை - futile, waste

'வெஞ்சின வேழமுண்ட

விளங்கனி போன்று நீங்கி

எஞ்சினான் போல நின்றா

னேத்தருந் தவத்தின் மிக்க'

(சீவக. 1122: 2-3).

வேள்வி Velvi (alter five / sacrificial fice)

(1) பலி - sacrificial offering

279