பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்காரம் Akkaram (sugar, sugarcane)

(1) இனிமை -sweetness

'.. .. .. .. அக்காரம் யாவரே

தின்னினும் கையாதாம் கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு'

(நாலடி.112)

(2) விருப்பு / அன்பு - liking,love

'ஆணமில் நெஞ்சத்து' அணிநீலக்

கண்ணார்க்குக் காணமிலாதார்

கடுஅனையர் - காணவே

செக்கூர்ந்து கொண்டாரும் செய்த

பொருளுடையார் அக்காரம்

அன்னார் அவர்க்கு' (நாவலடி.374)

மே.கான், 'கரும்பு'

அக்கு (உருத்திராட்சம்) Akku (bead

worn by ascetics)

(1) துறவு,புனிதம் - penance,holy

'அக்கினொடும் என்பணிந்த

அழகன் தன்னை அறுமுகனோடு

ஆனை முகற்கப்பன் தன்னை'

(திருநா.தேவா.413;5-6)

(ஆ) மணி Mani

(2) தூய்மை - pure

'மாசிலாத மணிதிகழ் மேனிமேல்'

(பெரிய.141:1)

அக்குரன் Akkuran (a liberalchief)

(1) வன்மை - liberality

'அக்குரன் அனைய

கைவண்மையையே' (பதி.14:7)

அகரம் Akaram (letter'a')

(1) முதல்,அடிப்படை,தொடக்கம்,

அசல் (மூலம்) - first,basic,

starting,original

"எழுத்து எனப்படுப, அகர முதல்

னகர இறுவாய்...'(தொல்.1)

(2) தோற்றுவாய், இறைமை - origin,

divinity

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி,

பகவன் முதற்றே உலகு' (குறள்.1)

(ஒப்பு) Alpha தொடக்கம்,பிறப்பு,

படைப்பு, முதன்மை; படைப்பாளி,

கடவுள்.

அங்காடி


அகரனகரம் Akaranakaram (letters a- z)

(1) முதலும் இறுதியும், முழுமை -

first and last, whole

'எழுத்து எனப்படுப அகர முதல்

னகர இறுவாய் முப்பஃது என்ப...'

(தொல்.1)

(ஒப்பு) Alpha and Omega முதலும்

இறுதியும், முழுமை.

அகல் Akal (hollow earthernlamp)

(1) ஒளி - light

'வாடையொடுநிவந்த ஆய்இதழ்

தோன்றி சுடர்கொள் அகலின்

சுருங்குபிணி அவிழ'

(அகம்.235:7-8)

அகில் Akil (eagle wood tree)

(1) நறுமணம் - fragarance

'அகில் சுடு கானவன் உவல் சுடு

கமழ் புகை' (நற்.282:7)

(2) வளமை - flourish

'கொல்லைப் புனத்த அகில் சுமந்து

கல் பாய்ந்து வானின் அருவி

ததும்பக் கவினிய நாடன்

நயமுடையன் என்பதனான்

நீப்பினும் வாடன் மறந்தன தோள்'

(ஐந்.எழு.2)

(3) கருமை - black

'குணதிசை மருங்கில் கார்கில்

துறந்து' (சிலப்.4:36)

(ஆ) பூழில் Pulil

நறுமணம் - fragarance

'சாந்த மரத்த பூழில் ஏழு புகை

கூட்டு விரை கமழும் நாடன்'

(ஐங்.212:1-2)

(இ) காகதுண்டம் Kakatuntam

நறுமணம் - fragarance

'கழுமிய காக துண்டம்

கமழ்தொறும் காள மேகம்'

(சூளா.1109:1)

அங்காடி Ankati (Market)

(1) வளம் - prosperous