பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேள்வி


'கபிலை கண்ணிய வேள்வி

நிலையும்' (தொல். 1036)

(2) புகழ் - fame / merit

‘வசைநீங்கிய வாய்மையால்,

வேள்வியால் திசை நாறிய குன்று

அமர்ந்து ' (பரி.17: 28-29)

(3) மேன்மை | மகிமை - glory /

eminence

'வேள்வியின் அழகு இயல்

விளம்புவோரும்' (பரி.19: 43)

(4) பயன் - use |

'பண்ணி தைஇய பயம் கெழு

வேள்வியின் விழுமிது நிகழ்வது

ஆயினும்' (அகம்.13: 11-12)

(5) சிறப்பு - excellence

'அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை

நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல்

மாண் வீயாச் சிறப்பின் வேள்வி

முற்றி' (புறம்.15: 18-20)

(ஆ) வேள்வி வேட்டல் Velvi

vettal

(6) உயர்வு, உவப்பு - loftiness,

gladness

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது,

வேள்வி வேட்டனை, உயர்ந்தோர்

உவப்ப' (பதி.74: 1-2)

(இ) வேள்வித்தீ Velvitti (sacrificial

fire)

(7) ஒளி - glitter

'பொச்சாப்பு இலாத

புகழ்வேள்வித் தீப்போல

எச்சாரும் மின்னும் மழை' (கார்.7:

3-4)

(ஈ) இராவணன் வளர்க்கும்

வேள்வி திரண்டெழாமல்

அணைந்து, அவ்விடத்திலிருந்து

கரையான்கள் கூட்டம் கூட்டமாகத்

தோன்றுதல் Iravanan valatkkum velvi

tirantelamal anaintu, avvitattiliruntu

karaiyankal kuttam kuttamakat tonrutal

(sacrificial fire put out; termite come

up)

(7) தீமை, அழிவு, இறப்பு - evil

omen

'ஆண் தகை இராவணன்

வளர்க்கும் அவ் அனல் ஈண்டில


வைகல்


பிறந்தவால் இனம் கொள் செஞ்

சிதல் தூண்ட அரு மணி

விளக்கு அழலும் தொல் மனை'

(கம்ப .சுந்.370: 1-3)

வேனில் Vénil (summer / spring)

(1) இன்பம் - happiness

செங் கண் இருங் குயில் எதிர் குரல்

பயிற்றும் இன்ப வேனிலும்

வந்தன்று' (நற்.224: 5-6)

(2) தண்மை - cool

'தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி'

(ஐங்.368: 3) |

(3) அருமை - rare / precious

'அரும் பதம் கொண்ட பெரும் பத

வேனில்' (ஐங்.400: 3)

(4) பெருமை | சிறப்பு - greatness /

eminence -

'பொழில் வதி வேனில் பேர் எழில்

வாழ்க்கை ' (பதி.48: 15)

(5) காமன், காதல் - cupid / love

'ஆனா விருப்போடு அணி அயர்ப,

காமற்கு வேனில் விருந்து

எதிர்கொண்டு ' (கலி.92: 67-68)

(6) கொடுமை | துன்பம் - cruel /

affliction

'இன்னா வேனில் இன் துணை ஆர'

அகம்.335: 6)

(7) அழகு - beauty

'ஆன் ஏமுற்ற காமர் வேனில்'

(அகம்.317: 14)

(8) செம்மை / நிறைவு - upright / full

'செழு மனை மறக்கும் செவ்வி

வேனில்' (அகம்.355: 8)

(9) வெம்மை – hot / warm

வேனில் அன்ன என் வெப்பு நீங்க'

(புறம்.397: 17)

(10) கொடுமை - cruel / harsh

'... ... .. .. எழுதரு பல் கதிர்ப் பருதி

காய் சினம் திருகிய கடுந் திறல்

வேனில்' (பெரும்.2-3)

வைகல் Vaikal (day)

(1) குளிர்ச்சி - cool

'செந்தீக் கதீ இய வெந்தழல்

புண்ணினுள் சந்தனச்

சாந்திட்டன்ன தண்மையொடு

வந்தது மாதோ வைக லின்றேன்'

(பெருங். மகத 7: 108-110)


280