பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அங்கி

'அகல் அங்காடி அசை நிழல்

குவித்த பச்சிறாக் கவர்ந்த பசுங்

கட் காக்கை'(நற்.258:7-8)

(2) ஒலி-sound

'கொளக் கொளக் குறையாது, தரத்

தர மிகாது. கழுநீர் கொண்ட

எழுநாள் அந்தி, ஆடு துவன்று

விழவின்,நாடு ஆர்த்தன்றே

மாடம் பிறங்கிய மலி புகழ்க்

கூடல் நாள் அங்காடி நனந்தலைக்

கம்பலை' (மது.426-430)

(ஆ) ஆவணம் Avanam

(1) வளம் - fertile

'மல்லல் ஆவண மறுகு உடன்

மடியின் (அகம்.122:3)

{{u|அங்கி}} Anki (fire)

(1) வேள்வி - sacrifice

'அவிர் சடை முனிவர் அங்கி

வேட்கும் ஆவுதி நறும் புகை

முனைஇ' (பட்,54-55)


(ஆ) அழல் Alal

(2) வேள்வி,வழிபாடு - sacrifice

worship

'மனைவியர்,நிறைவையின்,வசி

தடி சமைப்பின், சாலார்; தானே

தரிக்க என,அவர் அவி உடன்

பெய்தோரே,அழல் வேட்டு'

(பரி.5:38-41)

மே.காண், 'நெருப்பு'


அங்கை நெல்லி Ankai nelli (berry in

the palm)

(1) இனிமை / எளிமை - sweet,

simple

'அங்கை நெல்லியின் பழத்திடை

அமுதே' (சுந்.தேவா.690:3)

மே.காண், 'நெல்லி'

அச்சாணி (axle) பார். 'ஆணி'

அசுணம் Acunam (a legendaryanimal)

(1) நொய்ம்மை - fragile


அசோகம்



'அசுணம் கொள்பவர் கை போல்

நன்றும், இன்பமும் துன்பமும்

உடைத்தே' (நற்.304:89)


(ஆ) மான் Man

(2) மென்மை - soft

'மறையின் தன் யாழ் கேட்ட

மானை அருளாது , அறை கொன்று

மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,

பறை அறைந்தாங்கு,ஒருவன்

நீத்தான்' (கலி.143:10-12)

{{u|அசோகம்}} Acokam (a tree)

(1) சிவப்பு நிறம் - red colour

'அழல்நகுவன அலர்நெரிதர

அசைநிலைய அசோகம்'

(சூளா.432;4)

(ஆ) பிண்டி Pinti

சிவப்பு நிறம் - red colour

'எரிநிற நீள் பிண்டி இனர்

இனமெல்லாம்' (திணைமாலை.63:

1)

(2) உயர்ச்சி

'ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி

நாறு நாகமும்' (சீவக.149:3)

(3) சமண சமயம்

'வாரா கதியுரைத்த வாமன்

மலர்ததைந்த காரார் பூம் பிண்டிக்

கடவுள் நீ அன்றே' (சீவக.1247:3-

4)

(இ) பிண்டி வீழ்தல் Pintiviltal

(the pinti tree falling)

(4) இறப்பு, தீமை, துன்பம் - death,

evil,sorrow

'தொத்தணி பிண்டி தொலைந்தற

வீழ்ந்தது' (சீவக.223:1)

(ஈ) பிண்டி வீழ்தல் - கன்று

வளர்தல் Pinti vilthal - kanru valarthal

(fallen papal tree - young sprout)

சீவகன் பிறப்பு, எண்மரை

மணத்தல் - good omen

'தொத்தணி பிண்டி தொலைந்தற

வீழ்ந்த துஎண் முத்தனி மாலை

முழக்கிட னாக ஒத்ததன் றாள்

வழி யேமுளை யோங்குபு

வைத்தது போல வளர்ந்ததை

2