பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதர்

அதர் Atar (way)

(1) அச்சம், கொடுமை - fear,cruelty

'துவர்செய் ஆடைச் செந் தொடை

மறவர் அதர் பார்த்து அல்கும்

அஞ்சுவரு நெறியிடை' (நற்.33:6-7)

(2) மயக்கம் / குழப்பம் - confusion

'அயம்திகழ் நறுங் கொன்றை

அலங்கல் அம் தெரியலான்

இலங்கு எயில் எயப் பிறந்த

எரிபோல,எவ்வாயும்,கனைகதிர்

தெறுதலின்,கடுத்து எழுந்த

காம்புத் தீ மலை பரந்து தலைக்

கொண்டு முழங்கிய முழங்கு அழல்

மயங்கு அதர் மறுகலின், மலை

தலைக் கொண்டேன்'

(கலி.150:1-5)

(ஆ) கவலை Kavalai

(3) அரியதன்மை - rare

'ஏர் தரலுற்ற இயக்கு அருங்

கவலை' (நற்.79: 4)

(4) அச்சம் - fear

'பிறை மருள் வான் கோட்டு

அண்ணல் யானை,சினம் மிகு

முன்பின்,வாம் மான்,அஞ்சி

இனம் கொண்டு ஒளிக்கும்

அஞ்சுவரு கவலை'

(அகம்.115:13-15)

(5) மயக்கம் - confusion

'கடுவளி எடுத்த கால்கழி

தேக்கிலை நெடுவிளிப் பருந்தின்

வெறிஎழுந் தாங்கு, விசும்புகண்

புதையப் பாஅய், பலஉடன்

அகல்இடம் செல்லுநர்

அறிவுகெடத் தாஅய், கவலை

கரக்கும் காடு அகல் அத்தம்'

(அகம்.299:5-9)

(இ) ஆறு Aru

(6) கொடுமை, வெம்மை, துன்பம் -

cruelty, heat, suffering

'எறும்பி அளையின் குறும்பல்

சுனைய உலைக்கல் அன்ன பாறை

ஏறி,கொடுவில் எயினர், பகழி

மாய்க்கும் கவலைத்து என்ப,

அவர்தேர் சென்ற ஆறே'

(குறு.12:1- 4)

(7) மயக்கம் - confusion

'தூறுஅதர் பட்ட ஆறு மயங்கு

அருஞ்சுரம்' (கலி.5:3)

அதர்


(8) அச்சம் - fear

'கரிகாய்ந்த கவலைத்தாய்,

கல்காய்ந்த காட்டகம், வெரு வந்த

ஆறு என்னார்' (கலி.150:11-12)

(9) வழி - path

'அறியாமையின் நெறிதிரிந்து

ஒராஅது,ஆற்றுஎதிர்ப் படுதலும்

நோற்றதன் பயனே'

(பொரு.58-59)

(ஈ) நெறி Neri

(10) கொடுமை - cruelty

'கோட்டு மா வழங்கும் காட்டக

நெறியே' (ஐங்.282:5)

(11) அச்சம் - fear

'அஞ்சுவரு நெறியிடைத் தமியர்

செல்மார்' (அகம்.157:9)

(12) முறை - order

'அறிவுடை வேந்தன் நெறி அறிந்து

கொளினே' (புறம்.184:5)

(உ) கடம் Katam

(13) துன்பம், வறட்சி, வெம்மை -

tragic, drought, heat

'நுன்மழை தளித்தென நறுமலர்

தாஅய்த் தண்ணிய ஆயினும்,

வெய்யமன்ற - மடவரல்

இன்துணை ஒழியக் கடம் முதிர்

சோலைய காடு இறந்தோர்க்கே'

(ஐங்.328)

(ஊ) அத்தம் Attam

(14) வறட்சி - drought

'நீர் நசைக்கு ஊக்கிய உயவல்

யானை இயம் புணர் தூம்பின்

உயிர்க்கும் அத்தம்'(ஐங்.377:1-2)

(15) மயக்கம் / குழப்பம் - confusion

'நெறி மயக்குற்ற நிரம்பா நீடு

அத்தம்'(கலி.12:7)

(16) கொடுமை, பாதுகாப்பின்மை -

horrid,unsafe

'வாள்கண் வானத்து என்றூழ்

நீள்இடை, ஆள்கொல் யானை

அதர்பார்த்து அல்கும் சோலை

அத்தம் மாலைப் போகி'

(அகம்.325:18-20)

(எ) வழி Vali

(17) மயக்கம், மருட்சி - confusion,

perplexity