பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமரர் அலர்மழை சிந்துதல்

(ஆ) தேவர் Devar

(5) உயர்வு, மேன்மை - greatness

'தேவரனையர் புலவருந் தேவர்

தமரனையர் ஓரூர் உறைவார் -

தமருள்ளும் பெற்றன்னர் பேணி

வழிபடுவார் கற்றன்னர் கற்றாரைக்

காத லவர்' (நான்'76)

(6) தெய்வத்தன்மை - divine

.. .. .. பெருவரைமேற்

றேன்றேவர்க் கோக்கு மலைநாட!

வாரலோ வான்றேவர் கொட்கும்

வழி' (திணை.10:2-4)

(இ) வானவர் Vanavar

(7) அழிவின்மை

மாயாத வானவர்க்கும் மற்று

ஒழிந்த மன்னுயிர்க்கும்'

(கம்ப.ஆரண்.52:2)

அமரர் அலர்மழை சிந்துதல் Amarar

alarmalai cintutal

(1) நன்மை - goodness/blessing

'ஏர் அணங்கு இளம்பெரும் தேவி

நாளுறச் சீர் அணங்கு அவிர்

ஒளித் திவிட்டன் தோன்றினான்

நீர் அணங்கு ஒளிவளை நிரந்து

விம்மின ஆர் அணங்கு

அலர்மழை அமரர் சிந்தினார்'

(சூளா.72)

அமுதசுரபி Amutacurapi (bowl of

plenty)

(1) பெருக்கம், குறைவின்மை -

increase/not wanting

'ஆபுத்திரன் கை அமுதசுரபி

என்னும் மாபெரும் பாத்திர

மடக்கொடி கேளாய்' (மணி.11:44-

45)

(ஆ) ஓடு Otu

(2) வளமை, சுரத்தல் - prosper,yield

'நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங்

கூராது வாங்குநர் கையகம்

வருந்துதலல்லது தான்றொலை

வில்லாத் தகைமையன்றே'

(மணி.14:13-15)

(இ) பாத்திரம் Pattiram


அமுதம்/அமுது



(3) பசித்துயர் தீர்த்தல், புரத்தல்

ஓம்புதல் - provide,protect

'தன் கைப்பாத்திரம் அவள்கைக்

கொடுத்ததால் .. .. .. ஆங்கவர்

பசிதீர்த்து அந்நாடொட்டு

வாங்குகை வருந்த மன்னுயிர்

ஓம்பலின்' (மணி.14: 16,22-23)

(4) கொடை, ஈகை - benevolence

'பாத்திர தானமும் பைந்தொடி

செய்தியும்' (மணி.19:49)

(ஈ) பிச்சைப் பாத்திரம் Piccaip

patttiram


(5) குறைவுபடாத் தன்மை

'பத்தினிப் பெண்டிர் பாத்தூண்

ஏற்ற பிச்சைப் பாத்திரப்

பெருஞ்சோற்று அமலை அறத்தின்

ஈட்டிய ஒண்பொருள் அறவோன்

திறத்து வழிப்படூஉம் செய்கை

போல வாங்குகை வருந்த

மன்னுயிர்க் களித்துத் தான்

தொலைவில்லாத் தகைமை

நோக்கி' (மணி.17:1-6)

(உ) கடிஞை Katinai

(6) தெய்வத்தன்மை

'தீ தின்றாக கோமற் கீங்கீ தையைக்

கடிஞை அம்பல மருங்கோர்

தெய்வம் தந்தது திப்பிய மாயது

யானைத் தீநோய் அரும்பசி

கெடுத்த தூறுடை மாக்கட்கு

உயிர்மருந்து இதுவென' (மணி.19:

150-154)

அமுதம் / அமுது Amutam

(ambrosia)

(1) சுவை - taste

"ஏனது சுவைப்பினும் நீ கை

தொட்டது வானோர் அமுதம்

புரையுமால் எமக்கு என'

(தொல்.1092: 12:13)

(2) உப்பு, உயிர் - salt, life

'கடல் விளை அமுதம் பெயற்கு

ஏற்றாஅங்கு உருகி உகுதல்

அஞ்சுவல்'(நற்.88 :4-5)

(3) பால் - milk

' .. .. .. புதல்வர்ப் பயந்து

பணைத்து ஏந்து இளமுலை

அமுதம் ஊற' (மது.600-601)

(4) காம இன்பம் - pleasure