பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரலை

(2) அழிவு - destruction

'அரம்' பொருத பொன் போல

தேயும் உரம்பொழுது உட்பகை

உற்ற குடி' (குறள்.888)

(3) கூர்மை, பண்பின்மை - sharp,

bad conduct

'அரம்போலும் கூர்மைய ரேனும்

மரம்போல்வர் மக்கட்பண்பு

இல்லா தவர்' (குறள்.997)

(4) சீராகுதல் - reform

'தராதலத்தின் உள்ள தமிழ்க்

குற்றம் எல்லாம் அராவும் அரம்

ஆயிற்று அன்றே இராவணன்

மேல்' (கம்ப.பால.4:1-2)

(ஒப்பு) File Saw உணர்வுகள்,

கடும் உழைப்பு, பண்பட்ட

கருத்துகள், மூடநம்பிக்கையற்ற

எண்ணங்கள், விடாமுயற்சி.

அரலை Aralai (a flower)

(1) வருத்தம் - suffer

'அரலை மாலை சூட்டி,

ஏமுற்றன்று - இவ் அழுங்கல் ஊரே'

(குறு.214:6-7)

அரவு (snake) பார். 'பாம்பு'

அரவு உமிழ் மணி Aravu umil mani

(snake's gem)

(1) ஒளி - light

'அருவிதந்த அரவு உமிழ் திருமணி

பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக்

குறுத்தலின், இரவும் இழந்தனள்'

(அகம்.192:11-13)

(2) எச்சரிக்கை / விலக்கு -

caution/avoidance

'அரவு உமிழ் மணியின் குறுகார்'

(புறம்.294:8)

அரிமா Arima (lion)

(1) அச்சமின்மை - fearlessnesss

'உரும்பு இல் உள்ளத்து அரிமா

வழங்கும்' (நற்.112:4)

(2) வலிமை - strength

'அரிமா அன்ன அணங்குடைத்

துப்பின்' (பட்.298)

(3) கொள்கை - principle

அரிமா



'உடுக்கை உலறி உடும்பழிந்த

கண்ணும் குடிப்பிறப்பாளர் தம்

கொள்கையில் குன்றார் இடுக்கண்

தலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புல் கறிக்குமோ மற்று'

(நாலடி.141)

(4) முயற்சி - effort, perseverence

'ஈனமாய் இல்லிருந்து இன்றி

விளியினும் மானம் தலைவருவ

செய்பவோ - யானை வரிமுகம்

புண்படுக்கும் வள்ளுகிர்

நோன்தாள் அரிமா மதுகை அவர்'

(நாலடி.198)

(5) செயல்திறன் / தலைமை -

efficience,headship

'அரிமா வளைந்த நரிமாப் போல

இகன்முனை வேட்டுவர் இடுக்கண்

செய்ய' {பெருங்.உஞ்.56:25-26)

(ஆ) அரிமான் Ariman

(6) வீரம் - valour/powerful

'வியல் உளை அரிமான் மறம்

கெழு குரிசில்!' (பதி.88:15)

(7) சினம் - anger

'செங்கண் அரிமான்

சினவிடைமேல் நின்றாயல்'

(சிலப்.12:10.2)

(இ) உளைமான் Ulaiman

(8) வலிமை - strength

'உளைமான் துப்பின், ஓங்கு

தினைப் பெரும் புனத்து'

(அகம்.102:1)

(ஈ) மடங்கல் Matankal

(9) சினம் - anger

'மடங்கலின்சினைஇ, மடங்கா

உள்ளத்து' (புறம்.71:1)

வன்மை / வலிமை - strength

'சடங்கலா மகட்கிள மாந்தளிரே

முத்தம் பொரியச் சகிக்குமாவன்

மடங்கலா னையைப் பாயுமாறு

போல் சீறுதென்றல் வருமா'

(தனிப்.714 8:1-2)

(10) வெற்றி

வென்றி மடங்கல் விடக்குவர

முன்பார்த்து' (பெரிய.643:1-2)

(உ) அரி Ari

சினம் - anger