பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னிமிஞிலி

(ஒப்பு) Swan அழகு,

அறிவாற்றல், ஆன்மா, இணைவு,

உண்மையான காதல்,

உயர்குடிப்பிறப்பு, காலம், தனிமை,

துறவிகள், தூய்மை, நிலைபேறு,

பகுத்தறிவு, பெண், மீட்பு,

முனிவர்கள், மெய்ம்மை சார்ந்த

தூய்மை, மேன்மை, வளமை;

இறப்பு.

அன்னிமிஞிலி Anniminili (a lady who

fought for justice)

(1) பழிதுடைத்தல், துயரம்/துக்கம்/சூள்

- remove blame, sorrow / vow

'வாய்மொழித் தந்தையைக்

கண் களைந்து, அருளாது ஊர்முது

கோசர் நவைத்த சிறுமையின்,

கலத்தும் உண்ணாள் வாலிதும்

உடாஅள், சினத்தின் கொண்ட

படிவம் மாறாள், மறம்கெழு

தானைக் கொற்றக் குறும்பியன்,

செருஇயல் நல்மான் திதியற்கு

உரைத்து, அவர் இன்னுயிர்

செகுப்பக் கண்டு சினம்மாறிய

அன்னி மிஞிலி போல,

மெய்ம்மலிந்து, ஆனா உவகையேம்

ஆயினெம்' (அகம்.262:5-13)


அன்னை Annai (mother)

(1) அன்பு, இனிமை - love,

sweetness

'அன்னை போல இனிய கூறியும்'

(நற்.28:3)

(2) பாதுகாப்பு -safety

'பாவை அன்ன நிற் புறங்காக்கும்

சிறந்த செல்வத்து அன்னையும்

துஞ்சினள்' (நற்.182:3-4)

(3) சிறப்பு / உயர்வு -greatness /

high

'இன் உயிர் கழியினும் உரையல்,

அவர் நமக்கு அன்னையும்

அத்தனும் அல்லரோ?'

(குறு.93:2-3)

(4) மேன்மை / மதிப்பு - superiority/

honour

'அம்ம வாழி, - தோழி! -

அன்னைக்கு உயர்நிலை உலகமும்

சிறிதால்' (குறு.361:1-2)

(ஆ) தாய் Tay

அன்னை

(5) பாதுகாப்பு - safety

'தாழ்செறி கடுங்காப்பின் தாய்

முன்னர்' (கலி.48:10)

(6) இறப்பு / தியாகம் - death /

sacrifice

'தாய் சாப் பிறக்கும் புள்ளிக்

களவனொடு' (ஐங்.24:1)

(7) இரக்கம், அன்பு

'தாய் என உயிர்க்கு நல்கி

தருமமும் தகவும் சால்பும்'

(கம்ப.கிட.353:1)

(8) கருணை

'தாயே அனைய கருணையான்

துணையைஏதும் தகைவு இல்லா'

(கம்ப.சுந்.1171:1)

அருள் / இரக்கம்

'காய்வ செயினும் குழவிக்கண்

கவன்று கழிகண்ணோட்டத்தால்

தாய் தன் முலையில் அமுதூட்டும்

தகையன் அறவோன் தானென்று'

(நீலகேசி.134:1-2)

(இ) ஈன்றாள் Inral

(9) சிறப்பு, கடவுட்டன்மை, மேன்மை

- greatness, divine, superiority

'கண்ணிற் சிறந்த உறுப்பில்லை

கொண்டானின் துன்னிய கேளிர்

பிறரில்லை மக்களின்

ஒன்மையவாய்ச் சான்ற

பொருளில்லை ஈன்றாளோடு

எண்ணக் கடவுரு மில். (நான்.57)

(ஈ) மகன் காண் தாய் Makan

kan tay

(10) விரைவு, விருப்பம்

'மகக்காண் தாயின் மிகப்பெரிது

விதும்பி' (பெருங்.வத்.7:40)

(ஒப்பு) Mother அறிவுநுட்பம்,

இதயம்,இறக்கம்,இரத்த உறவு ,

உணவூட்டம், ஊழ், கடல்,

சந்ததிகளின் இணைவு, படைப்பு,

பாதுகாப்பு, பூமி, பெண்மை,

மறுபிறப்பின் சுழற்சி, முழுமை,

வாழ்க்கைத் தத்துவம், வாழ்வின்

மூலம், வளமை; இறப்பு.