பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆம்பல்

(5) கீழ்மக்கள் - low born

'ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக்

கடைத்தும் விரிநீர்க் குவளையை

ஆம்பல் ஒக்கல்லா பெருநீ ரார்

கேண்மை கொளினு நீ ரல்லார்

கருமங்கள் வேறுபடும்'

(நாலடி.236)

(6) அறியாமை - ignorance

'விரிகதிர் வெண்மதியும் மீன்

கணமுமாமென்றே விளங்கும்

வெள்ளைப் புரிவளையும்

முத்துங்கண்டு ஆம்பல்

பொதியவிழ்க்கும் புகாரே எம்மூர்'

(சிலப்.7.5)

(7) நெய்தல் திணை - seashore region

'தோடு உடைந்தன ஆம்பலும்'

(சூளா.20:3)

(8) சிவப்பு நிறம் - red colour

'தீ விரி ஆம்பலில் சிவந்த

வாயினன்' (சூளா.77:3)

(ஆ) ஆம்பல் கூம்புதல் Ampal

kumputal (ampal - with closed petals)

(9) மாலைக்காலம், துன்பம் -

evening, suffering

'குண்டுநீர் ஆம்பலும் கூம்பின

இனியே வந்தன்று வாழியோ

மாலை' (குறு.122:2-3)

ஆம்பல் Ampal (a melody)

(1) இனிமை - sweetness

'ஆம்பல்அம் தீ ம்குழல் தெள்விளி

பயிற்ற, .. .. .. துணைஇய

மாலை துன்னுதல் காணுஉ'

(குறி.222,230)

ஆம்பி Ampi (mushroom)

(1) இல்லாமை / வறுமை - poverty

'ஆடு நனி மறந்த கோடு உயர்

அடுப்பின் ஆம்பி பூப்ப'

(புறம்.164;1-2)

(ஒப்பு) Mushroom நீண்ட நாள்

வாழ்வு; அவநம்பிக்கை, கெட்ட

செய்தி, சுற்றித்திரிபவர், நிலையற்ற தன்மை .

ஆமான் Aman (bison)

(1) பொருள் வளம் - wealth

ஆர்

'ஏரி கான்றன்னபூஞ்சினை

மராஅத்து, தொழுதி போக

வலிந்து அகப்பட்ட மடநடை

ஆமான், கயமுனிக் குழவி'

(மலை.498-500)

ஆமை Amai

(1) பேதைமை அறியாமை -

foolishness / ignorance

'கொலைஞர் உலையேற்றித்

தீ மடுப்ப ஆமை நிலையறியாது

அந்நீர் படிந்து ஆடியற்றே'

(நாலடி.331:1-2)

(2) அடக்கம் - self control

'பொருந்தலால் பல்லி போன்றும்

போற்றலால் தாயர் ஒத்தும்

அருந்தவர் போன்று காத்தும்

அடங்கலால் ஆமை போன்றும்'

(சீவக.1895: 1-2)

ஆயிரம் Ayiram (thousand)

(1) மிகுதி - எசேச்ஸ்

'அணங்குடை வச்சிரத்தோன்

ஆயிரம்கண் ஏய்க்கும் கணங்கொள்

பல்பொறிக் கடுஞ்சினப் புகரும்'

('கலி. 105: 15-16)


(ஒப்பு) Thousand நிலைபேற்றிற்கான

வாழ்த்து, நீள்தன்மை.

ஆர் Ar (the mountain ebony)

(1) அரசக்குறியீடு - royalty

'போந்தை வேம்பே ஆர் என

வரூஉம் மாபெருந் தானையர்

மலைந்த பூவும்' (தொல்.1006:4-5)

(2) சோழர் - chola


'.. .. .. ஆர மார்பின் சிறு கோற்

சென்னி ஆரேற்றன்ன'

(நற்.265:5-6)

(ஆ) ஆரங்கண்ணி Arankanni

சோழர்

"ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்'

(சிலப்.பதிகம்:12)

(இ) தார் (ஆத்தி மாலை) Tar

சோழர்