பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனை வெம்போரில் குறுந்தூறு

ஆனை வெம்போரில் குறுந்தூறு</b Anai

vemporil kurunturu

(1) துன்பம், அலைப்புறுதல்

suffering

'ஆனை வெம்போரில் குறுந்தூறு

எனப் புலனால் அலைப்புண்

டேனை' (திருவா.6:21.1-3)



இங்குலிகக் குன்று Inkulikak kunru

(1) சிவப்பு நிறம் - red colour

'செவ்வரைச் சென்னி

அரிமானோடு அவ்வரை ஒல்கி

உருமிற்கு உடைந்தற்றால்'

(களவழி.35:1-2)

இட்டசித்தி ittacitti

(1) புனிதம், சிறப்பு, கடவுட்டன்மை -

holy,special,divine

'விண்ணோர் ஏத்தும் வியத்தகு

மரபில் புண்ணிய சரவணம்

பவகாரணியோடு இட்ட சித்தி

எனும் பெயர் போகி' (சிலப்.11:

93-95}

இட்டிகை Ittikai (brick)

(1) பயனின்மை - uselessness

'மறுமையொன் றுண்டோ

மனப்பட்ட எல்லாம் பெறுமாறு,

செய்ம்மினென் பாரே -

நறுநெய்யுள் கட்டி யடையைக்

களைவித்துக் கண்சொரீஇ

இட்டிகை தீற்று பவர்'

(பழமொழி.108)

(ஒப்பு) Brick இணைப்பு,

நிலைபேறு, படைப்பு, பிறப்பு,

வலிமை; கணத்தில் அழியும்

தன்மை, கொடுமை,

சார்புத்தன்மை.

இடக்கண் துடித்தல் (பெண்) Itakkan

tutittal

(1) நன்மை, (சீவகன்) வருகை - good

omen

இன்டம்


'எல்லிருள் கனவில் கண்டேன்

கன்னிடன் ஆடும் இன்னே'

(சீவக.1909:1)

இடத்தோள் Itatol

(1) உதவி, துணை - help, support

மன்னருள் மன்னர் மனத்தில் தேறி

இடத்தோள் அன்ன இடற்கரும்

காதல் உரிமைத் தேவியர்க்கு

ஒருமீக் கூரிய பட்டத் தேவிக்குப்

பட்டதை எல்லாம்'

(பெருங்.உஞ்.47:149-152)

இடம் வீழ்தல் Itam viltal (fall on the

left side)

(1) சிறப்பின்மை / இழிவு -

degradation/low

'கிடந்துஉயிர் மறுகுவ தாயினும்

இடம்படின் வீழ்களிறு மிசையாப்

புலியினும் சிறந்த தாழ்வில்

உள்ளம் தலைத்தலைச் சிறப்ப'

(அகம்.29:2-4)

இடி (thunder) பார். 'உரும்'

இடுதேளிடல் Itutelital

(1) தீமை, துன்பம், பழி - evil, sorrow

'கடுக்கும் என் நெஞ்சம்

கனவினால் என்கை பிடித்தனன்

போயோர் பெரும்பதியுள் பட்டேம்

பட்ட பத்தியில் படாததொரு

வார்த்தை இட்டனர் ஊரார்

இடுதேள் இட்டென்றன்மேல்

கோவலற்கு உற்றதோர்

தீங்கென்றது' (சிலப்.9:45-49)

இடைமகன் கொன்ற மரம் Itaimakan konra

maram

(1) துன்பம் - affiction

'இடைமகன் கொன்ற இன்னா

மரத்தினேன் தந்த துன்பக்

கடலக்த்து அழுந்த வேண்டா

களைக இக்கவலை என்றான்'

(சீவக.19148:3-4)

இண்டம் (புதர்) Intam

(1) நெருக்கம், தீமை - dense,evil