பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளவேனில்

'.. .. .. இளமையது அருமையும்'

(தொல்.987)

(2) அரிய தன்மை - rare

'பெறலரும் இளமை பெற்றுப்

பேரின்பம் உற்றார் அன்றே'

(பெரிய.402)

(ஒப்பு) Youth ஆளுமை,

உள்ளுணர்வு, சூரிய உதயம்,

தலைவன், மகன், விழிப்புணர்வு,

வீரம்.

இளவேனில் Ilavenil (spring season)

(1) இனிமை - pleasure,joy

'குருகு இரை தேரக் கிடக்கும் -

பொழிகாரில் இன இளவேனில்,

இது அன்றோ வையை?'

(பரி.6:76-77)

(2) இன்பம், அழகு, புதுமை -

pleasure, beautiful,newness

'போது அவிழ் மரத்தொடு

பொருகரை கவின் பெற, நோதக

வந்ததென்றால், இளவேனில் மேதக'

(கலி.26:7-8)

(3) துன்பம் - suffer

'.. .. .. பீடு இலா அரசன் நாட்டு

ஏதிலான் படை போல,

இறுத்தந்தது இளவேனில்'

(கலி.27:7-8}

(4) நன்மை - good

'நயந்தார்க்கோ, நல்லைமன்,

இளவேனில்!' (கலி.32:13)

(ஒப்பு) Spring இளமை, இனிமை,

காதலீடுபாடு, பசுமை, புதுமை,

மறுபிறப்பு, மீட்பு, மென்மை,

வளர்ச்சி; அறியாமை.


இறக்கை, இறகு (feather, wing) பார்.

'சிறகு'


இறவு Iravu (prawn)

(1) உயிர்ப்பு, இயக்கம் - lively,

action

'திரை முதிர் அரைய தடந் தாட்

தாழைச் சுறவு மருப்பு அன்ன முட்

தோடு ஒசிய, இறவு ஆர் இனக்

குருகு இறை கொள இருக்கும்'

(நற்.131:4-6))


இறை



(2) வளமை - prosperity

'நத்தொடு, நள்ளி, நடை இறவு,

வய வாளை, வித்தி அலையில்

விளைக! பொலிக! என்பார்'

(பரி.10:85-86)

(3) வளைவு - curve

'மடங்கிறவு போலும்யாழ்ப்

பண்பில்லாப் பாண! தொடங்குறவு

சொற்றுணிக்க வேண்டா -

முடங்கிறவு பூட்டுற்ற

வில்லேய்க்கும் பூம்பொய்கை

யூரன்பொய் கேட்டுற்ற கீழ்நாள்

கிளர்ந்து' (திணைமாலை.131)

(ஆ) இறா Ira

(4) வளம் - prosperity

'பொற்றொடி மகளிர் புறங்கடை

உகுத்த கொக்கு உகிர் நிமிரல்

மாந்தி, எல் பட, அகல் அங்காடி

அசை நிழல் குவித்த பச்சிறாக்

கவர்ந்த பசுங்கண் காக்கை'

(நற்.258:5-8)

வளைவு - curve

'கூனிறாக் கண்டாலும் கொள்ள

முடியாதேற் றுக்கந்துக்கம்'

(நீலகேசி.256:3)

இறை Irai (king)

(1) அச்சம் - fear

'அணங்கே விலங்கே கள்வர்தம்

இறைஎன பிணங்கல் சாலா அச்சம்

நான்கே' (தொல்.1202)

(2) பற்றுக்கோடு - support

'அஞ்சல் என்ற இறை

கைவிட்டென' (நற்.43:8)

(3) நடுவுநிலைமை - justice

'ஓர்ந்து கண்ணோடாது

இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து

செய்வஃதே முறை' (குறள்.541)

(4) பாதுகாப்பு, தலைமை - safety,

headship

'இறைகாக்கும் வையகம் எல்லாம்

அவனை முறைகாக்கும் முட்டாச்

செயின்' (குறள்.547)

(ஆ) அரசர் Aracar

(5) தலைமை - chief

'ஐவகை மரபின் அரசர் பக்கமும்'

(தொல்.1021:2)

(6) முறைமை - order