பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடல்

'ஒளிறு ஏந்து மருப்பின் களிறு

மாறு பற்றிய தேய்புரிப் பழங்

கயிறு போல, வீவதுகொல் என்

வருந்திய உடம்பே?'

(நற்.284:9-11)

(ஆ) யாக்கை Yakkai

(2) நிலையாமை / இறப்பு -

transitoriness / death

'கூற்று அடூஉ நின்ற யாக்கை

போல' (பதி.13:11)

நிலையாமை, அழிவு

'படுமழை மொக்குளின் பல்காலும்

தோன்றிக் கெடுமிதோர்

யாக்கையென்று எண்ணி'

(நாலடி.27:1-2)

(3) அரியது, பயன் - rare, useful

'அரும்பெறல் யாக்கையைப் பெற்ற

பயத்தால்' (நாலடி.34:1)

(இ) உயிர் இன்றி வாழும்

யாக்கை Uyir inri valum yakkai

(4) இயக்கமின்மை - motionless

'மன்னரை இன்றி வைகும்

மண்ணுலகு எண்ணும் காலை

இன்னுயிர் இன்றி வாழும்

யாக்கையை ஒக்கும்' (பெரிய.15.29)

(ஈ) உயிர் இழந்த யாக்கை Uyir

ilanta yakkai

(5) அசைவற்ற நிலை, இயக்கமின்மை

- inactive

'இன்னுயிர் இழந்த யாக்கையின்

இருந்தனள் துன்னியது உரைத்த

சுதமதி' (மணி.7:133-134)

(உ) உடலில் ஒளி தோன்றுதல்

Utalil oli tonrutal

(6) நன்மை, வெற்றி - goodness,

victory

'ஆளி ஏறனையவன் அணிபொன்

மேனிமேல் நீள் ஒளி தவழ்ந்தது'

(சூளா.1218:1-2)

(ஒப்பு) Body ஆன்மா, வலிமை,

வளமை; இறப்பு.

உடல் (body) பார். 'உடம்பு'

உடுக்கை



உடுக்கை Utukkai (dress, cloth)

(1) பாதுகாப்பு - safety

'வளை நரல் பௌவம் உடுக்கை

ஆக' (நற். கட.வா:2)

(2) இன்றியமையாமை - necessity

'உடுக்கை மருந்துறையுள்

உண்டியோ டின்ன கொடுத்துக்

குறைதீர்த்த லாற்றி -

விடுத்ததின்சொல் ஈயாமை யென்ப

எருமை எறிந்தொருவர் காயக்கு

லோபிக்கு மாறு' (பழமொழி.338)

(ஆ) சிவந்த உடுக்கை Civanta

utukkai (red colour dress)

(3) முருகன் - Muruga

'குன்றி ஏய்க்கும் உடுக்கை'

(குறு. கட. வா:3)

(4) உவகை - happy

'தோள் புதிது உண்ட பரத்தை இல்

சிவப்புற நாள் அணிந்து, உவக்கும்

சுனங்கறை யதுவே' (பரி.9:19-20)

(இ) இருள் உடுக்கை Irul utukkai

(dark dress)

(5) செல்வம் - wealth

'புதை இருள் உடுக்கைப் பொலம்

பனைக்கொடியோற்கு' (பரி.2:22)

(ஈ) மாசு உண் உடுக்கை Macu

un utukkai (soiled dress)

(6) ஏழ்மை - poverty

'மாசு உண் உடுக்கை, மடி வாய்,

இடையன்' (புறம்.54:11)

(உ) சிதாஅர் உடுக்கை Citar utukkai

(torn dress)

(7) வறுமை - poverty

'சிதாஅர் உடுக்கை, முதாஅரிப்

பாண!' (புறம்.138:5)

(ஊ) ஆடை Atai

(8) மறைத்தல் - hide

'ஆடையான் மூஉய்

அகப்படுப்பேன்'(கலி.142:26)

(எ) துவர் ஆடை Tuvar atai

(saffron robe)