பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடுக்கை இழந்தவன் கை

(ஒப்பு) Cloth, Clothes, Dress,

Garment அலங்காரம், அறிவாற்றல்,

ஆன்ம ஆற்றல், உடல்,

கலாச்சாரம், கவர்ச்சித்திறம்,

குறிப்பிட்ட தொழில், செல்வ

வளம், தனிச் சிறப்பு, துணை,

நிலைபேறு, பெண்மை, மறைத்தல்;

உண்மையை மறைத்தல், பாலியல்,

மாறுபடும் தன்மை, வாழ்வில்

புதிய நிலைக்குச் செல்லுதல்.

வெண்மை ஆடை - தூய்மை.

உடுக்கை இழந்தவன் கை Utukkai

ilantavan kai

(1) நட்பு

'உடுக்கை இழந்தவன் கை போல்

ஆங்கண் இடுக்கண் களைவதாம்

நட்பு' (குறள்.788)

(ஆ) உடையழி காலை உதவிய

கை Utaiyali kalai utaviya kai

(1) நட்பு

'நயந்த நண்பின் அன்னர் நோக்கி

உடையழி காலை உதவிய

கைபோல் நடலை தீர்த்த

நண்பனது இயல்பென'

(பெருங்.நர.3:38-40)

உடும்பு Utumpu (a type of big lizard)

(1) பற்றுக்கோடு - support

'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்

கோட்டு உடும்பு அடைந்தன்ன

நெடும் பொரி விளவின்'

(நற்.24:1-2)

(2) பிடிப்பு - grip

'அரக்கு விரித்தன்ன செந்நில

மருங்கின் பரற் தவழ் உடும்பின்

கொடுந் தாள் ஏற்றை'

(மலை.507-508)

(3) வலிமை, விடாப்பிடி - strong,

stubbern

'வங்கினைப் பற்றிப் போதா

வல்லுடும்பு என்ன நீங்கான்'

(பெரிய.10.116)

உடை (dress) பார். 'உடுக்கை'

உப்பு Uppu (salt)

உப்பு



(1) நிலையாமை - transitoriness

'உவர் விளை உப்பின் குன்று

போல் குப்பை மலை உய்த்துப்

பகரும் நிலையா வாழ்க்கை'

(நற்.138:1-2)

(2) வளமை, செல்வம் - prosperity,

wealth

'தம் நாட்டு விளைந்த

வெண்ணெல் தந்து, பிற நாட்டு

உப்பின் கொள்ளை சாற்றி'

(நற்.183:1-2)

(3) மதிப்பு/இன்பம் - honour/pleasure

'.. .. .. நின் மெய்வாழ் உப்பின்

விலைஎய் யாம் என'

(அகம்.390:10-11)

(4) சுவை - taste

'குப்பைக் கீரை கொய்கண்

அகைத்த முற்றா இளந் தளிர்

கொய்துகொண்டு, உப்பு இன்று,

நீர் உலையாக ஏற்றி, மோர்

இன்று, அவிழ்ப் பதம் மறந்து,

பாசடகு மிடைந்து'

(புறம்.159:9-12)

(5) அளவு - limit

'உப்பு அமைந்தற்றாற் புலவி அது

சிறிது மிக்கற்றால் நீள விடல்'

(குறள்.1302)

(6) சுவை, உவகை, இன்பம்

pleasure, joy, enjoyment

'உப்பமை காமத்துப்பின் அவரிடம்

உரைத்தும் அன்றே' (சீவக.107:4)

(ஆ) உப்பு இயல் பாவை Uppu

iyal pavai (salt doll)

(7) நிலையாமை - transitoriness

"உப்பு இயல் பாவை உறை

உற்றதுபோல, உக்கு விடும் என்

உயிர்' (கலி.138:16-17)

(இ) உப்பு ஒய் சகடம் Uppu oy

cakatam (salt cart)

(8) நிலையாமை, அழிவு -

transitoriness, destruction

'இருங்கரை நின்ற உப்பு ஒய்

சகடம் பெரும்பெயல் தலைய

வீஇந்தாங்கு' (குறு.165:3-4)

(ஈ) உப்புச் சிறை Uppu cirai

நிலையாமை, அழிவு