பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலை

'இருங் கண் ஞாலத்து ஈண்டு

தொழில் உதவி' (நற்.157:1)

(12) புரத்தல், பொறை - protect,

patience

'நின் புரத்தலும் நோன்மையும்

ஞாலத்து உள' (பரி.4:28)

(13) பயனுடைமை, தாய்மை, விரிவு -

usefulness, motherhood, wide

'பல் பயம் உதவிய பசுமை தீர்

அகல் ஞாலம் புல்லிய புனிறு

ஒரீஇப் புது நலம் ஏர்தர'

(கலி.29:3-4)

(உ) உலகு Ulaku

(14) பேரளவு huge

'உலகு கிளர்ந் தன்ன உருகெழு

வங்கம்' (அகம்.255:1)

(ஊ) கிடக்கை Kitakkai

(15) விரிவு - wide

'இமிழ் கடல் வளைஇய ஈண்டு

அகன் கிடக்கை' (புறம்.19:1)

(எ) உலகம் கம்பித்தல் Ulakam

kampittal (quake)

(16) தீமை, அழிவு, இறப்பு

'ஓடியுமால் மருப்பு உலகமும்

கம்பிக்கும்' (கம்ப.ஆரண்.431:2)

(ஒப்பு) World எல்லையற்ற

பேரளவு, நிலைபேறு,

பெருஞ்சிறப்பு.

உலை Ulai (boiling pot)

(1) துன்பம்

'கொலைஞர் உலைஏற்றித்

தீமடுப்ப ஆமை நிலைஅறியாது

அந்நீர் படிந்துஆடி அற்றே'

(நாலடி.331:1-2)

உலைக்கல் Ulaikkal (anvil)

(1) வெம்மை - heat

'உலைக்கல் அன்ன பாறை ஏறி'

(குறு.12:2)

(2) வலிமை - strength

'உலைக்கல் அன்ன வல்லாளன்னே'

(புறம்.170:17)

உழிஞை



(ஒப்பு) Anvil அறிவாற்றல்,

ஆற்றல், உலகம், சக்தி, நீர்,

பெண்மைக்கொள்கை, பொருண்மை,

வளமை, விளைவளம்.

உழவர் Ulavar (farmer)

(1) புலவர் - poets

'செது மொழி சீத்த செவி செறு

ஆக, முது மொழி நீரா, புலன்நா

உழவர் புது மொழி கூட்டுண்ணும்'

(கலி.68:3-5)

(2) உழைப்பு - hard work

'முகவை இன்மையின் உகவை

இன்றி, இரப்போர் இரங்கும்

இன்னா வியன்களத்து, ஆள்ஆழிப்

படுத்த வாள்ஏர் உழவ'

(புறம்.368:11-13)

(ஆ) மள்ளர் Mallar

(3) வலிமை

'வன்னிலை மள்ளர் உகைப்ப

எழுந்த மரக்கோவை' (பெரிய.14.3)

உழவு Ulavu (ploughing)

(1) பயன், காமம் - yield, lust

'கரும்பு எல்லாம் நின் உழவு

அன்றோ?' (கலி.64:14)

(2) செம்மைபடுத்துதல் - reform

'முதைபடு பசுங்காட்டு அரில்பவர்

மயக்கி, பகடுபல பூண்ட உழவுறு

செஞ்செய், இடுமுறை நிரம்பி,

ஆகுவினைக் கலித்து, பாசிலை

அமன்ற பயறுஆ புக்கென'

(அகம்.262:1-4)

(3) மெய்ம்மை

'மெய்ம்மையாம் உழவைச் செய்து

விருப்பெனும் வித்தை வித்தி'

(திருநா.தேவா.2921:1-2)

உழிஞை Ulinai (a flower)

(1) மருதத்திணை - marutam

'உழிஞை தானே மருத்தத்துப்

புறனே' (தொல்.1010)

(2) எயிற்போர் - beseige

'முழுமுதல் அரணம் முற்றலும்

கோடலும் அனைநெறி

மரபிற்றாகும் என்ப' (தொல்.1011)

(3) வெற்றி - victory