பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளக்கப்பட்டு, காலந்தோறுமான வளர்ச்சி காட்டப்பெற்று, பாடற்கருவுக்கேற்பவும் காலக் கருத்துக்கேற்பவும் பொருண்மை மாறியும் விரிந் தும் வளர்ந்தும் தொடர்வதும் அல்லது தொடராது நின்றுவிட்டமையும் இடத்துக்கேற்பக் காட்டப்பெற்று, வரலாற்று நோக்கிலும், ஒப்பீட்டுப் பார்வையிலும் ஆய்வுக்குறிப்பாக ஒவ்வொரு குறியீடும் விளக்கப்படல் தேவையாகும். தமிழிலக்கியக் களன் நிலையில் மட்டுமன்றி,உலகளாவிய கருத்துகளுடன் இணைத்தும் இயைத்தும் பொருத்தியும் முரணியும் காணக்கூடுமிடங்களும் தனித்த தெளிவான விளக்கங்கள் அளிக்க முடியும். இலக்கியத் தளத்தில் மட்டுமன்றி, வாழ்வியலிலும் நாட்டுப்புறக் களனிலும் சமயநெறியிலும் வழிபாட்டு முறையிலும் நம்பிக்கை. பழக்கவழக்கங்களிலும் விழாக்களிலும் சடங்குகளிலும் அமையும் செயற் பாடுகளிலும் பொருட்களிலும் குறியீட்டுப் பெருண்மைத் நேர்வதும் மக்கட்பண்டபாட்டின் மனப்பரிமாணத்தை வெளிப்படுத்தித் தர முடியும். அது ஒரு கனியாக அமையும்.

....அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டுத்

தன்காலத்தில் தன் கனியைத் தந்து

இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்

(விவிலியம். சங். 1.3)

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கண் படின்

(குறள். 216)

மேலாய்வுக்கும் ஆழ்கல்விக்கும் விருப்பும் முயற்சியும் இவ்வகராதியைப் பார்ப்பவர்க்கு ஏற்படுமாயின் அதனையே இத்திட்ட வெற்றியாகக் கருதுவேன்.

அன்னிதாமசு