பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எலும்பு மாலை

எலும்பு மாலை Elumpu malai

(1) அழிவு

'என்பொடு கொம்பொடு ஆமை

இவைமார்பு இலங்க எருதேறி

ஏழை உடனே'

(திருஞான.தேவா.2653: 1-2)

(ஆ) அக்கு Akku

அழிவு

'அக்கினார் அமுதுண்கலன் ஓடுமே'

(திருஞான.தேவா.2854:7-8)

எழிலி Elili (cloud)

(1) கடவுட்டன்மை / புனிதம்

divinity / holy

'உலகிற்கு ஆணியாகப் பலர்

தொழ, பல வயின் நிலைஇய

குன்றின் கோடுதோறு ஏயினை,

உரைஇயரோ! - பெருங் கலி

எழிலி!' (நற்.139:1-3)

(2) தன்மை - cool

'தலை நாட்கு எதிரிய தண் பத

எழிலி' (நற்.362:3)

(3) வளமை - prosperity

'வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக்

கறங்கு குரல் எழிலி கார்

செய்தன்றே' (ஐங்.452:1-2)

(4) மழை - rain

'பொய்யா எழிலி பெய்விடம்

நோக்கி (புறம்.173:5)

(5) அழகு - beautiful

'இருங்கடன் மாந்திய ஏர்கொள்

எழிலி' (திணை.ஐம்.26:1)

(ஆ) கார்

(6) தண்மை - cool

'தனி திரு தண் கார் தலைஇ'

(நற்.316:9)

(7) விரைவு - speed

'நின்னே உள்ளி வந்தனென் - நல்

நுதல் அரிவை! - காரினும்

விரைந்தே' (ஐங்.492:4-5)

(8) அழகு - beautiful

'எஃகு இடை தொட்ட, கார்க்

கவின் பெற்ற ஐம்பால் போல்'

(கலி.32:1)

(9) வளமை - prosperity

'கார்புகன்று எடுத்த சூர்புகல்

நனந்தலை' (அகம்.303:5)

எழிலி


(இ) கொண்மூ Konmu

(10) பயன் - use

'ஒளிறு வாள் பொருப்பன் உடல்

சமத்து இறுத்த களிறு

நிரைத்தவைபோல் கொண்மூ

நெறிதர, .. .. ..வண்மைபோல்

வானம் பொழிந்த நீர்'

(பரி.22: 1-2,8)

(11) வளமை - prosperity

'ஞாலம் வறம் தீரப் பெய்ய,

குணக்கு ஏர்பு, காலத்தில்

தோன்றிய கொண்மூப் போல்'

(கலி.82:1-2)

(12) இயக்கம் - action

'பெய்து வறிது ஆகிய

பொங்குசெலற் கொண்மூ'

(அகம்.125:9)

(13) மேன்மை / வளர்ச்சி -

superiority / development

'ஆர் கலி யாணர்த் தரீஇய, கால்

வீழ்ந்து, கடல்வயின் குழீஇய

அண்ணல்அம் கொண்மூ'

(புறம்.205:10-11)

(ஈ) கொண்டல் Kontal

(14) பயன், வளமை - use, prosperity

'பயன்நிலம் குழைய வீசி,

பெயல்முனிந்து, விண்டு முன்னிய

கொண்டால் மாமழை'

(அகம்.235:4-5)

(உ) மஞ்சு Mancu

(15) நிலையாமை - unstable

'.. .. .. யாக்கை மலையாடு

மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே

நிலையாது நீத்து விடும்'

(நாலடி.28)

(16) கருமை

'மஞ்சே என வீழ் மறலிக்

கிறைநீள்' (பெரிய.8.18)

(ஊ) வானம் Vanam

அழகு - beautiful

'தடமென் பணைத்தோளி!

நீத்தாரொ வாரார் மடநடை

மஞ்ஞை அகவக் கடன் முகந்து

மின்னோடு வந்தது எழில் வானம்'

(ஐந்.எழு.16:1-3)