பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழினி

(எ) பருவக் கொண்மூ Paruvak

konmu

(17) கொடை, உதவி

'பருவக் கொண்மூப் படியெனப்

பாவலர்க்கு ஒருமையின்

உரிமையின் உதவி' (தனிப்.92:5-6)

(ஏ) மேகம் Mekam

(18) கொடை, வன்மை

'புள்ளி மால் வரை பொன் என

நோக்கி வான் வெள்ளி வீழ்

இடை வீழ்த்தெனத் தாரைகள்

உள்ளி உள்ள எலாம் உவந்து

ஈயும் அவ் வள்ளியோரின்

வழங்கின மேகமே' (கம்ப.பால.16)

(ஒப்பு) Cloud அருளுடைமை,

அறிவாற்றல், அன்பு, உறக்கம்,

தனிமை, தெய்வத்தன்மை,

நிலையற்ற தன்மை, நிறைவு, நீர்,

பண்புடைமை, மகிழ்ச்சி,

மறைவெளியீடு, முன்னுணர்வு,

வளமை, வானுலகம்.

எழினி Elini (a liberal chief)

(1) நடுவுநிலைமை, பாதுகாப்பு

justice, safety

'.. .. .. வெம்போர் நுகம்படக்

கடக்கும் பல்வேல் எழினி

முனையான் பெருநிரை போலக்

கிளையொடுங் காக்கதன்

கொழுநன் மார்பே'(குறு.80:47)

எழுத்து (letter) பார். 'எண்-எழுத்து'

எழுகுளிரு மிதித்த ஒரு பழம்

Elukuliru mititta oru palam (a fruit

treaded by seven crabs)

(1) சிதைவு, அழிவு, துன்பம் -

decline,destruction,sorrow

'.. .. .. வெண் கோட்டு அதவத்து

எழு குளிறு மிதித்த ஒரு பழம்

போலக் குழைய' (குறு.24:3-5)

எழுது சித்திரங்கள் Elutu cittirankal

(1) செயலின்மை / இயக்கமின்மை -

inactive / motionless

எறும்பி



'இரண்டு பாடும் துலுங்காப்

புடைபெயரா எழுது சித்திரங்கள்

போல நின்றனவே' (நாலா.283:7-

8)

எழுமீன் Elumin (seven stars)

(1) கடவுட்டன்மை - divinity

'கைதொழு மரபின் எழுமீன்

போல'(நற்.231:2)

மே.காண். 'அருந்ததி'

எள் El (seasame)

(1) சிறுமை / புன்மை - small / low,

simple

"அடை இடைக் கிடந்த கை பிழி

பண்டம், வெள் எட் சாந்தொடு,

புளிப் பெய்து அட்ட வேளை

வெந்தை, வல்சி ஆக, பரற் பெய்

பள்ளிப் பாய் இன்று வதியும்

உயவல் பெண்டிரேம்

அல்லேம்மாதோ' (புறம்.246:6-10)

(2) சிறுமை / சிறிய அளவு - small

/ little

'எட் பகவு அன்ன சிறுமைத்தே

ஆயினும், உட்பகை உள்ளது ஆம்

கேடு' (குறள்.889)

(ஆ) எள் (எட்பூ) El

(3) வெண்மை, விளக்கம், - white,

bright

'எட்பூ நிறத்தோடு கட்காமுறுத்தும்

விளங்கறல் வெள்ளியின் வீசுறும்

என்றதன்' (பெருங்.மகத,12:71-72)

(4) அழகு - beautiful

'எள் ஒத்த கோல மூக்கின்

ஏந்திழை ஒருத்தி முன்கை'

(கம்ப.பால.928:1)

எறும்பி அளை Erumpi alai (anthill)

(1) சிறுமை / குறுமை - small/narrow

'எறும்பி அளையின் குறும் பல்

சுனைய' (குறு.12:1)

மே.காண். 'புற்றம்'

எறும்பி Erumpi (ant)

(1) உழைப்பு - hard work