பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் எல்லை காணும் காக்கை

மே.காண். 'புனல்'


(ஒப்பு) Sea, Ocean அறிவு,

ஆழங்காண முடியாத உண்மை ,

இயக்க நிலை, இறைமை,

குறிக்கோள், சுதந்திரம், செல்வம்,

தனிமை, தூய்மை, நிலைபேறு,

பிறப்பு, மறுபிறப்பு, மறைவடக்கம்,

மிகப் பரந்த நிலை, வளமை,

வாழ்வு; இறப்பு, கேளாத்தன்மை,

கொடிய தன்மை, தூய்மையற்ற

நிலை .

கடல் எல்லை காணும் காக்கை Katal

ellaik kanum kakkai

(1) இயல்பின்மை - impossible

'முனைவனாய் மூர்த்தி அல்லான்

மூடுமே மாசும் என்பாய்

கனைகடல் எல்லை காணும்

காக்கை ஒத்தாய்கொல் என்றாள்'

(நீலகேசி.431: 3-4)

கடல்தரங்கம் Kataltaraikam (sea waves)

(1) ஒலி - noise

'அரவச் சேனை கடல்தரங்கம்'

(பெரிய 3801:3)

கடிஞை Katifai (bowl)

(1) ஈகை | கொடை - benevolence

'நினைத்த திதுவென்றந்

நீர்மையை நோக்கி மனத்த

தறிந்தீவார் மாண்டார் - புனத்த

குடிஞை யிரட்டும் குளிர்வரை

நாட! கடிஞையில் கல்லிடுவா ரில்'

(பழமொழி.375)

(2) இரத்தல் - beg

'பிச்சை ஏற்ற பெய்வளை

கடிஞையில்' (மணி.பதி.63)

கடிமரம் Katimaram (totem tree)

(1) காவல் - security

'வடி மணி அணைத்த பணைமருள்

நோன் தாள், கடி மரத்தான் களிறு

அணைத்து நெடு நீர துறை கலங்க'

(பதி.33: 2-4)

கடுகு (mustard)

(1) சிறுமை - smallness

கண்


... .. .. செம்பொன் மேருவினைக்

கட்டாகக் கட்டிக் கடுகள

வாய்நிறை காட்டவல்ல'

(தனிப்.611:2-3)

கடை (shop) பார். 'அங்காடி'

கடைக்குளம் காய்தல் Kataikkulam

kaytal

(1) தீமை - evil

‘ஆடு இயல் அழல் குட்டத்து ஆர்

இருள் அரை இரவில், முடப்

பனையத்து வேர் முதலாக் கடைக்

குளத்துக் கயம் காய, .. .. .. ..

கனை எரி பரப்ப, கால் எதிர்பு

பொங்கி, ஒரு மீன் வீழ்ந்தன்றால்,

விசும்பினானே; .. .. .. மேலோர்

உலகம் எய்தினன்' (புறம்.229)

கண் Kan

(1) கண்ணோட்டம் - sympathy,

compassion

'அம் சில் ஓதி என் தோழி தோட்

'துயில் நெஞ்சின் இன்புறாய்

ஆயினும், அது நீ என் கண் ஓடி

அளிமதி - நின் கண் அல்லது

பிறிது யாதும் இலளே'

(நற்.355; 8-11)

(2) காமம் - passion

'கண்தர வந்த காம ஒள்எரி'

(குறு.305:1)

(3) அன்பு - love -

'போது இல் வறுங்கூந்தல்,

கொள்வதை, நின்னை யாம்

ஏதிலார் கண்சாய' (கலி.80: 22-23)

(4)அருள் நோக்கம் - grace

'ஆயிழாய்! நின் கண் பெறின்

அல்லால், இன் உயிர் என் கண்

எவனோ , தவறு?' (கலி.88: 8-9)

(5) அறிவு, கல்வி - knowledge,

education

'கல்லாது மிதிர்ந்தவன் கண்

இல்லா நெஞ்சம் போல்'

(கலி.130: 6)

(6) நோக்கம் | இன்றியமையாமை

necessity |

'பசி தினத் திரங்கிய இரும்பேர்

ஒக்கற்கு ஆர்பதம் கண்ணென

மாதிரம் துழைஇ' (புறம்.370: 3-4)


68