பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்

(7) எண், எழுத்து | கல்வி -

number, letter / education

'எண் என்ப ஏனை எழுத்து என்ப

இவ் விரண்டும் கண் என்ப

வாழும் உயிர்க்கு ' (குறள்.392)

(8) சிறப்பு | ஆளுமை - excellence

'புலப்பேன்கொல் - புல்லுவேன்

கொல்லோ - கலப்பேன்கொல் -

கண் அன்ன கேளிர் வரின்'

(குறள். 1267)

(9) செல்வம் - wealth

'முழவொலி முந்நீர் முழுதுடன்

ஆண்டார் விழவூரில் கூத்தேபோல்

வீழ்ந்தவிதல் கண்டும் இழவென்

றொருபொருள் ஈயாதான் செல்வம்

அழகொடு கண்ணி னிழவு'

(பழமொழி.217) -

(10) சிறப்பு, அருமை - important

'கண்ணிற் சிறந்த உறுப்பில்லை

கொண்டானின் துன்னிய கேளிர்

பிறரில்லை (நான், 57:1-2)

(11) கருணை - grace

'கண்நுதலான் தன்கருணைக்

கண்காட்ட வந்தெய்தி' (திருவா.1:

21)

(ஆ) கண் ஆடல் Kan atal

(12) நன்மை, தலைவன் வரவு

good,

'நுண் ஏர் புருவத்த கண்ணும்

ஆடும்' (ஐங்.218: 1)

(இ) நெற்றிக்கண் Nerrikkan

(13) உயர்வு, மேன்மை , சிறப்பு

high, superiority, excellence

'பிறை நுதல் விளங்கும் ஒரு கண்

போல, வேந்து மேம் பட்ட பூந்

தார் மாற' (புறம்.55:5-6)

(ஈ) முக்கண் Mukkan

(14) இறைமை - divinity

'உமைஅமர்ந்து விளங்கும்,

இமையா முக்கண், மூஎயில்

முருக்கிய, முரண்மிகு செல்வனும்

நூற்றுப் பத்து அடுக்கிய

நாட்டத்து, நூறுபல் வேள்வி

முற்றிய வென்று அடு கொற்றத்து'

(திருமுரு.153-156)

கண்



(உ) கண்ணின் கருமணி Kannin

karumani

(15) பாதுகாப்பு, அருமை - safety,

worthy, valuable

'கண்ணுள் மணியே போல்

காதலால் நட்டாரும் எண்ணுந்

துணையிற் பிறராகி நிற்பரால்

எண்ணி உயிர்கொள்வான்

வேண்டித் திரியினும் உண்ணுந்

துணைகாக்கும் கூற்று '

(பழமொழி.135)

(ஊ) கண் இன்மை Kan inmai

(16) அழகின்மை / ஊனக்குறியீடு -

ugly, handicap

'கண் இல் ஒருவன் வனப்பு

இன்னா ' (இன்னா . 16:3)

(எ) இடக்கண் ஆடல் Itakkan atal

(17) நன்மை - good omen

'உருவவேற் கண்ணாய்! ஒருகால்

தேர்ச் செல்வன் வெருவி வீந்து

உக்க நீள் அத்தம் - வருவர் சிறந்து

பொருள் தருவான் சேட்சென்றார்

இன்றே இறந்து கண் ஆடும் இடம்'

(திணைமாலை.80)

(ஏ) கண்மணி Kanmani pupil (apple

of one's eye) |

(18) இன்றியமையாமை, சிறப்பு

worthy of love

'கண்மணி அனையாற்குக் காட்டுக

என்றே ' (சிலப்.13: 75)

(19) அன்பன் – very much loved person

'மனங்கவல்வின்றி மனையகம்

புகுந்தென் கண்மணி அனையான்

கடிதீங்குறுகென' (மணி.16: 47-48)

(20) நட்பு - friendship

'கண்மணி அன்ன திண்

நட்பாளன்' (பெருங். இலா.8: 170)

(ஐ) கனல் ஆடு கண் Kanal atu

kan

(21) அழிப்புச்செயல் - destroy

'கறை உடையான் கனல்

ஆடுகண்ணால் காமனைக்

காய்ந்தவன் காட்டுப் பள்ளி'

(திருஞான. தேவா.161:5-6)