பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


அமைப்பு வழியாக அம்புலி ஊர்தியினுள் நுழைந்து அதனை விண்கலத்தினின்றும் பிரித்தனர். இப்பொழுது இரண்டும் தனித்தனியே சந்திரனைச் சுற்றி வந்து கொண்டிருந்தன. தாய்க் கலத்திலிருந்து கொண்டே காலின் சந்திரனைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அவருக்குக் கீழாக சேய்க்கலமாக அம்புலி ஊர்தியிலிருந்துகொண்டு ஏனைய இருவரும் சந்திரனைச் சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் சந்திரனில் இறங்கவேண்டும் என்பது திட்டம்.

சந்திரனுக்கு அண்மை உயரத்தில் வந்து கொண்டிருந்த 'கழுகு' என்ற அம்புலி ஊர்தியிலுள்ள சில விசைகளை இயக்கி அதனை அம்புலித் தரையில் இறக்கினர் அதிலிருந்த விண்வெளி வீரர்கள். 'கழுகு' சந்திரனில் இறங்கியதும் இருவரும் கதவைத் திறந்து கொண்டு உடனே வெளியே வரவில்லை. ஊர்தியிலுள்ள முக்கோண வடிவமான இருசாளரங்களின் வழியாகச் சந்திரனின் மேற்பரப்பைப் பார்த்ததுடன் அப்போதைக்கு மனநிறைவு பெற்றனர். ஏனெனில், அம்புலியில் இறங்கிய பதினைந்து மணி நேரத்திற்குப் பிறகுதான் அதன் தரையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பது அவர்கட்கு இடப் பெற்றிருந்த கட்டளை! இறங்கிய வேகத்தில் ஊர்திக்கு ஏதாவது ஊறு தேர்ந்துள்ளதா என்பதை முதலில் அவர்கள் சோதித்துப் பார்த்தனர். பிறகு இனிமையாக உண்டு அமைதியாக எட்டு மணி நேரம் உறங்கி ஓய்வு கொண்டனர். பிறகு இருவரும் அம்புலியில் இறங்கி ஏழு மணி நேரத்தில் தம் பணியை முடித்துக் கொண்டனர்.

பிறகு இருவரும் "கழுகில்" ஏறிச் சில விசைகளை முடுக்கியதும் அந்த ஊர்திமேலே கிளம்பிச் சந்திரனை வட்டமிட்டது. இதுகாறும் வட்டமிட்டுக் கொண்டிருந்த 'கொலம்பியா' வுடன் இணைந்து கொண்டது. விண்வெளி வீரர்கள் இருவரும் மீண்டும் அம்புலி ஊர்தியிலிருந்து தாய்க் கலத்திற்குக் குறுகிய குகை வழியாக வந்து சேர்ந்தனர். அவர்களைக் காலின்ஸ் அன்பொழுக வரவேற்றார். இப்பொழுது தேவையற்ற "கழுகினைக்" கழற்றி விட்டனர். அது தன்னந்தனியாக சந்திரனை வட்டமிட்ட வண்ணம் இருந்தது!

தாய்க் கலத்திலிருந்த விண்வெளி வீரர்களும் அதனுடைய இராக்கெட்டுப் பொறியைத் தக்க சமயத்தில் இயக்கினர். விண்-