பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


கில்லை. புணர்ச்சியின்பொழுது இலட்சக் கணக்காக வெளிப்படும் இருவகை விந்தணுக்களிலும் எது முட்டையை அடைகின்றது என்பதைத் திட்டமாகக் கூற முடியாது. அது தற்செயலாக நடைபெறும் சேர்க்கையே; ஒற்றையா? இரட்டையா? என்று பார்க்கும் முறையை யொத்ததே. அன்றியும், முட்டை கருவுறும் பொழுதே பிறக்கும் குழந்தையின் பால் அறுதியிடப் பெறுகின்றது. அதனை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றும் ஆற்றல் நம்மிடம் இல்லை என்பது அறியத்தக்கது.

இனி, X, Y நிறக்கோல்கள் எவ்வாறு பால்வேற்றுமையை விளைவிக்கின்றன என்பதை விளக்குவேன். ஒவ்வொரு நிறக் கோலிலும் ஜீன்கள் (Genes) உள்ளன என்பதும், அவையே பெற்றோருடைய குடிவழிக் கூறுகளை வழிவழியாகக் கொண்டு செலுத்துகின்றன என்பதும் ஈண்டு அறியத் தக்கவை. ஒத்துள்ள நிறக்கோல்களில் உள்ள 'ஜீன்'களின் அமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் X நிறக்கோலில் அதிகமான ஜீன்களும் Y நிறக்கோலில் குறைவான 'ஜீன்'களும் உள்ளன. இந்த 'ஜீன்' களில் குடிவழிக்கூறுகள் (எ-டு. கண், காது, மூக்கு, உரோமம், உடல் நிறம் போன்றவை) அடங்கியுள்ளன என்று கருதுவது தவறு. 'ஜீன்'கள் யாவும் வேதியியல் முறையிலேயே செயற்படுகின்றன. உடலின் ஒவ்வோர் உயிரணுவிலும் உள்ள 'ஜின்'கள் வெவ்வேறு விதமான ஹார்மோன்களை உண்டு பண்ணுகின்றன என்றும், அவற்றின் மூலமாகவே உறுப்புகளின் தன்மைகள் அமைகின்றன என்றும் அறிவியலறிஞர்கள் ஆய்ந்து கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஆய்வுகள் இன்னும் உள்ளன அவற்றை ஈண்டு விளக்க நேரம் இல்லை.

ஆண் குழந்தை பிறப்பதும் பெண் குழந்தை, பிறப்பதும் நம்முடைய கையில் இல்லை; அது இயற்கையன்னையின் திருவிளையாடல் என்பதை அறிந்து கொண்டோம். 'ஆணாகவும் இல்லை; பெண்ணாகவும் இல்லை?' என்ற 'இரண்டுங்கெட்டான்கள்' (ln - betweeners) பிறப்பதும் உண்டு. இதுவும் பெற்றோர்களின் எண்ணத்தால் ஏற்படுவது இல்லை. இஃது ஏதோ கால்வழி இயல் (Genetics) கூறுகளில் ஏற்படும் மாற்றத்தால், சூழ்நிலையில் நேரிடும் நிலைகுலைவினால், நேரிடுகின்றது. இவற்றால் பால் அமைப்பில் பல்வேறு